Thursday 12 September 2013

நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை

 
நான்கு பக்கம் இருக்க
நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நாளா பக்கமும் உன் பார்வை போனால்
நான்கு பேர்களால் நீ பேசப் படுவாய்

உனக்கென்ற மனம் உன்னிலிருக்க
உனக்கேற்ற மனம் உயர்வாயிருக்க
நோக்கமும் செயலும் உயர்வாயிருக்க
நேசமற்ற மக்கள் உனை புறம் பேசுவதேன் !

உலகம் மக்களுக்காக படைக்கப் பட்டிருக்க
உலக மக்களில் நீயும் ஒருவராய் படைக்கப் பட்டிருக்க
உனக்குள் இருக்கும் அறிவு உயர்வடைய
உனக்காக மட்டும் நீ வாழாமலிருக்க
உயர்ந்தோர் உரையைக் கேட்டு உன்னை உயர்த்திக் கொள்
பேசுவோர் பேசட்டும்
பேசுவது இறை மொழியாக இருக்கட்டும்
இல்லாததை பொல்லாததை பேசுவோர் பொய்பிக்கப் படுவார்

உலகத்தை சுற்றி வா
உலகம் சுற்ற பயணம் தேவையில்லை
உலகம் சுற்ற உன்னிடமுள்ள கணினியே உனக்கு உதவும்
உலகத்தை நான்கு சுவருக்குள்ளும் நீ பார்த்து விடலாம்

நான்கு பேர்கள் நீ சுற்றிய உலகத்தை அறிவாரோ !
நான்கு பேர்கள் பேசும் பேச்சுக்காக நாம் வாழவில்லை
நம்மை படைத்த இறைவன் பார்வையே நமக்கு முக்கியம்
நம்மை படைத்த இறைவனை அறிய நாளா பக்கமும் நாம் அறிதல் வேண்டும்
நாளா பக்கமும் நாம் அறிந்தால் இறைவனது மகிமையை அறிய முடியும்

இறைவனை அறிய நம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்
இறைவனை அறிய நம்மை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment