Monday, 15 December 2014

வெட்கம் வருவது உடற்கூறு மற்றும் குணத்தைப் பொறுத்தது

சேர்ந்து வா தயக்கம் காட்டாதே
சேர்ந்து வர வெட்கமாக இருக்கிறது
சேர்ந்து வாழ விருப்பம்
சேர்ந்து வர ஏன தயக்கம்
சேர்ந்து போக பார்ப்பவர்கள் பரிகாசம் செய்வார்கள் என பயமாக உள்ளது

இந்த காலத்திலும் இப்படியா இருப்பது
இந்த காலத்திதான் இப்படி இருக்க வேண்டுமாம்
எந்த காலத்தில்தான் சேர்ந்து வருவாய்
புனித பயணம் ஹஜ் செய்யும்போது சேர்ந்து போவோம்
புனித பயணம் ஹஜ் செய்ய காலம் கடத்த விரும்புகின்றாயா
புனித பயணத்தை இப்பொழுதே செய்து விடவேண்டுமென்று விரும்புகின்றேன்
இன்ஷாஅல்லாஹ் போவோம் அதற்கு இப்பொழுதே சேர்ந்து வர துணிவைப் பெற்றுவிடு
சேர்ந்து போகவேண்டும் என்ற ஆர்வமும் ,பிரியமும் மனதில் மேலோங்கி நிற்கின்றது
தனித்து போக முடியும் என்ற பயமற்ற மன தைரியமும் துணிவும் இருக்கின்றது
இருப்பினும் ஹஜ் பயணத்தைத் தவிர மடற இடங்களுக்கு உங்களோடு மட்டும் வர வெட்கமாய் இருக்கின்றது
ஏன் தேவையற்ற வெட்கம்
வெட்கப்படுவதே உங்கள் மீது உள்ள பாசத்தை காதலை அதிகமாக்குகின்றது
வெட்கப்படுவதற்கு வெட்கப்பட்டு
தேவையற்றதர்க்கெல்லாம் வெட்கப் படாதே

வெட்கம் வருவது உடற்கூறு மற்றும் குணத்தைப் பொறுத்தது
('ஆக்ஸைடோசின் எனப்படும் ஒரு ஹார்மோன் தான் இந்த தயக்கம், வெட்கம், கூச்சம் போன்றவற்றையெல்லாம் விரட்டும் அதிசய மருந்தாக உருவெடுக்கிறது.')

No comments:

Post a Comment