Saturday, 30 August 2014

நடிப்பவரோடு சேர்ந்து நடிக்க மனம் இடம் தரவில்லை

அழுததைப் பார்த்து
மனம் நொந்தது
அழுபவரை அமைதிப் படுத்த முயன்றேன்

அழுவது போல் பாவனை செய்தாள்
மனம் சிரித்தது
அழுபவள் அழும் பாவனை
அடங்கும் வரை
கண்டு கொள்ளவில்லை

அழும் பாவனைக்கு
அழும் நடிப்புக்கு
ஆறுதல் சொன்னால்
அவசியமற்ற
செலவாகுமென
அறிந்துக் கொண்டேன

Thursday, 28 August 2014

பெண் பார்க்க வந்தாயோ! பொருள் அடைய வந்தாயோ!

எம்மை பார்க்க வந்தாய்
எம்மீது போர்த்தப் பட்ட பொருளைப் பார்க்கிறாய்
எம்மை சுற்றியுள்ள பொருளைப் பார்க்கிறாய்
உம்மோடு வந்தவர்களும்
உமது குணத்தோடு ஒன்றி உள்ளனர்
உங்கள் செயல் வெட்கப் படுவதாய் இருக்க
உம்மைப் பாராமலேயே
நான் வெட்கத்துடன் நின்றேன்

மறைப்பதேன் !

 
மறைப்பதென்ன மகனே
ஒன்றுமில்லை அம்மா

கையில் ஒரு பை
பையில் ஒரு பொட்டலம்
மகனின் செயல் தாய்க்கு தெரியாதா
வாங்கியது தான் வாங்கினாய்
வாங்கியதில் கொஞ்சம் சேர்த்து வாங்கலாமே
சேர்த்து வாங்கியிருந்தால்
உனது மனைவிக்கு கொடுப்பதோடு
உனது சகோதரிகளுக்கும் சேர்த்து கொடுக்கலாமே

நீயும் உன் மனைவியும் மகிழ்வதோடு இருக்க
உங்களோடு சேர்ந்து அனைவரும் மகிழ்வார்களே

பூவும் இனிப்பும் யாவரும் விரும்பும் பொருளாக இருக்க
பகிர்ந்து கொடுக்க யாவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள்

Monday, 25 August 2014

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர

உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை
உன் உடல் அசைவு தரவில்லை

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்


.பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்க ...

செய்தி துறையை ,பத்திரிகை துறையை ஆள்பவர்கள் முதலாளிகளும் (கார்பரேட் நிறுவனங்கள் ) ஆட்சி செய்பவர்க்களுமாக உள்ளார்கள் .
நல்ல மனம் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தினால் மக்கள் அப் பத்திரிகையை வாங்குவதில்லை .
அதற்க்கு விளம்பரங்களும் கிடைக்காமல் நஷ்டமாகி பத்திரிகை நிறுத்தப் படுகின்றது .
கலைக்கதிர்,மஞ்சரி போன்ற பத்திரிகைகள் செய்த சேவைகள் அதிகம் .ஆனால் அப் பத்திரிகைகள் இப்பொழுது இல்லை .

உன்னைப் பார்த்தாலே அடிமை

உன்னைப் பற்றி உயர்வாய் சிலர் சொன்னார்கள்
உன்னைப் பார்த்தாலே அடிமையாய் விடுவாய் என்று சிலர் சொன்னார்கள்

பலர் பலவிதமாகச் சொல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் அதிகமானது
உன்னிடம் வந்தவுடன் பலர் பலவிதமாகச் சொல்வதிலும் உண்மை இருப்பதாக அறிகின்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்
உன்னைப் பார்த்த பின் பிரிய மனமில்லை

Saturday, 23 August 2014

போய் விடு! பொருத்தமானால் வந்து விடு!



உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை பாசத்திற்கு
உன் உடல் அசைவு தரவில்லை தேவையானதிற்கு

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்