Saturday, 30 August 2014

நடிப்பவரோடு சேர்ந்து நடிக்க மனம் இடம் தரவில்லை

அழுததைப் பார்த்து
மனம் நொந்தது
அழுபவரை அமைதிப் படுத்த முயன்றேன்

அழுவது போல் பாவனை செய்தாள்
மனம் சிரித்தது
அழுபவள் அழும் பாவனை
அடங்கும் வரை
கண்டு கொள்ளவில்லை

அழும் பாவனைக்கு
அழும் நடிப்புக்கு
ஆறுதல் சொன்னால்
அவசியமற்ற
செலவாகுமென
அறிந்துக் கொண்டேன


அவள் அழுத
பாவனையும்
நடிப்பும்
எனக்கு
மகிழ்ச்சியைத் தர
அதுவே நல் மருந்தானது

நடிப்பவரோடு சேர்ந்து நடிக்க
மனம் இடம் தரவில்லை

நடிப்பவர் நடித்துவிட்டு பணம் சேர்க்க
நடித்ததை பார்க்கவே பணம் செலவாகிறது

சிலர் நடிப்பதும்
இயல்பாய் இல்லாத நிலையில்
வெறுப்பும் தந்து விடுகின்றது
    Mohamed Ali
 
 

No comments:

Post a Comment