Monday, 27 April 2015

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க'


பதினாறும் பெற்றதாய் பெருமை பேசுவார்
பதினாறில் பெண்மகள் பெறவில்லையே யென வேதனைப் படுவார்

'பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க' என்று
பெருமக்கள் திருமணத்தில் வாழ்த்திச் சென்றனர்

பதினாறில் நன்மக்களும் ஒன்றாகி நிற்க
நன்மக்களைப் பெற்றெடுத்தாலும்
நன்மக்களில் ஒரே ஒரு பெண்மகள் இல்லாமற் போனது
நன்மக்களை பெற்றதில் நிறைவில்லாமல் போனது

Saturday, 18 April 2015

உயர உயர பறந்தாலும் இருக்குமிடம் வருவதுதானே இயற்கை

இன்று வாழ்த்துவாய்
நாளை சாடுவாய்
நாளைய மறுநாள் வரவேற்பாய்

இன்றோ
நாளையோ
நாளைய மறுநாளோ
காலமெல்லாம்
உன் ஈர்ப்பில்
என்னை இருக்கச் செய்து விட்டாய்

Friday, 17 April 2015

யார் செய்த குற்றம்

அறியாதவளின் அசைவு
அறியாதனுக்கும் ஆட்டம் தந்தது
அறியாதவள் ஆடை உடலோடு ஒட்டி இருக்க
அறியாதவளின் அங்கங்கள் மேடு பள்ளமாய் விளக்கி நின்றது
அறியாதவள் அறிந்துதான் அத்தகைய ஆடையை விரும்பி உடுத்தினாளோ
அறியாதவள் கருப்பு நிற அங்கியை ஆடையை தன் மீது போர்த்தித்தான் கொண்டாள்
அவள் அறியாள் அந்த அங்கியே அவளது அங்கங்களை மேடு பள்ளமாக காட்டிக் கொடுத்து விடுமென்று
அவள் உடுத்திய புறப் போர்வை இருக்கமானதாக் இருந்தது அவளது இதயத்தின் இறுக்கம் போல்
அறியாதவளின் இறுக்கம் யாரையும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை
இருப்பினும் அவளது உள்மது அறியாது அவளது மூடிய வெளித் தோற்றத்தின் வடிவங்களைக் கண்டு வசீகரிக்கப்பட்டு மற்றவர்களை தடுமாற வைப்பது

இருவரின் எண்ணங்கள் மாறுபட்டிருக்க இணைய வாய்ப்பில்லாமல் போனது
இருப்பினும் அவள் அவ்வாறு இறுக்கமான ஆடையை உடுத்தி வந்ததால் முதல் குற்றம் அவளையே சாரும்

குற்றம் செய்தவனை விட
குற்றம் செய்யத் தூண்டுபவரே முதல் குற்றம் செய்தவர் ஆவார்

உறவுகள்

உறவுகள்‬ வேண்டும்
உறவுகள்‬ உன்னதமாய் இருத்தல் வேண்டும்
உறவுகளில் சிராய்ப்பு வந்தாலும் சரி செய்தல் வேண்டும்

உறவுகள் குருதி வகையில் வந்ததாய் இருக்கலாம்
உறவுகள் சேர்த்தல் வகையாகவும் இருக்கலாம்
உறவுகள் கொடுத்தல் வாங்குதல் முறையாகவும் இருக்கலாம்

உறவுகள் தொடர தொடர்புகள் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்
உறவுகள் காலங்களை கடந்து இருக்க வேண்டும்
உறவுகள் கன நேரத்தில் முடிந்தும் போகலாம்

உறவுகள் உயிரோட்டமுள்ளதாய் இருத்தல் வேண்டும்
உறவுகள் நெஞ்சத்திலிருந்து  தொடங்க வேண்டும்
உறவுகள் புறத்தோற்றத்தில் வண்ணம் ததததாய் இல்லாமல் இருத்தல் வேண்டும்

உறவுகள் உள்ளத்தை மகிவிக்க வேண்டும்
உறவுகள் நீடிக்க இறைவனின் அருளை வேண்டல் வேண்டும்
உறவுகளின் நலனுக்காக் இறைவனிடம் வேண்டுதல் வேண்டும்

                                           Mohamed Ali


Thursday, 16 April 2015

உன் நினைவில் இருக்கச் செய்

இறைவா !
நான் விழித்த போது உன்னை மறந்தேன்
நான் உறங்கியபோது உன் பார்வையில் இருந்ததை மறந்து

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை காதலிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்

எதை எழுதுவது

எதை எழுதுவது
எதையாவது எழுது
எல்லாம் எழுதி விட்டேன்

எதைப் படிப்பது
எதையாவது படி
எல்லாம் படித்து விட்டேன்

அவள் அடுப்பங்கரை அவளுக்கே சொந்தம்
அவள் அடுப்பங்கரையில் அவளது வேலை தொடர
அவளது அடுப்பங்கரைப் பக்கம் வரக் கூடாதாம்

Sunday, 12 April 2015

எதைப் பற்றி எழுதலாம்

எதைப் பற்றி எழுதலாம்
அரசியல்
வேண்டாம் பிரச்சனையாகும்
காதல்
அய்யய்யோ அது வேண்டாம்
மார்க்கம்
அதில் தவறு வந்தால் திட்டுவார்கள்
வரலாறு
என் வரலாறே தெரியாது .மற்ற வரலாறு வேண்டாம்
கல்வி
பிழை வந்தால் சிரிப்பார்கள்
குடும்பம்
அது பெரிய குழப்பம். அதுவும் வேண்டாம்
பின் எதை எழுதலாம்!