Thursday 16 April 2015

உன் நினைவில் இருக்கச் செய்

இறைவா !
நான் விழித்த போது உன்னை மறந்தேன்
நான் உறங்கியபோது உன் பார்வையில் இருந்ததை மறந்து

நான் சிரிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் அழும்போது உன்னை நினைக்கின்றேன்

நான் மற்றவரை காதலிக்கும்போது உன்னை மறந்தேன்
நான் தனித்து விடப்பட்டபோது உன் நினைவில் மூழ்கின்றேன்
நான் உண்ணும்போது உன்னை மறந்தேன்
நான் உண்ணும் உணவு உன்னால் கொடுக்கப்பட்டதாய் இருக்க
நான் உன்னை நினைக்கின்றேன் பசியால் வாடும்போது

நான் ஆரோக்கிய நிலையில் இருக்க உன்னை மறந்தேன்
நான் ஆரோக்கிய நிலை குன்றய உன்னருள நாடி உன்னை நினைக்கின்றேன்

நான் கோபமடைய என்னையும் மறந்து உன்னையும் மறந்தேன்
நான் அமைதியான நிலையில் இருக்க என் நினைவில் நீ இருக்கின்றாய்

இறைவா
நான் உன் நினைவில் இருக்கச் செய் நான் இறக்கும் தருவாயில்
நான் என் வாழ்விலும் உன் நினைவில் இருக்கச் செய்
நான் உயிரோடு இருந்து வாழும் நிலையிலும்

No comments:

Post a Comment