எதையாவது எழுது
எல்லாம் எழுதி விட்டேன்
எதைப் படிப்பது
எதையாவது படி
எல்லாம் படித்து விட்டேன்
அவள் அடுப்பங்கரை அவளுக்கே சொந்தம்
அவள் அடுப்பங்கரையில் அவளது வேலை தொடர
அவளது அடுப்பங்கரைப் பக்கம் வரக் கூடாதாம்
அவள் சொல்லவில்லை
எதையாவது விளையாடு
எங்கேயாவது விளையாடு
எங்கேயாவது விளையாடி விட்டு வந்து விடென்று
எங்கேயாவது விளையாடப் போனால் வருவதற்கு நேரமாகுமாம்
விடுமுறை விட்டதென்று மகிழ்வாய் இருக்க
வீட்டிலேயே அடைத்து வைக்க விரும்புகிறாள் அம்மா
நான் பாதுகாப்பாய் இருக்க
நான் வீட்டிலேயே அடைந்துக் கிடக்க வேண்டுமாம்
நான் பள்ளிக் கூடத்திலேயே அடைந்து இருக்கலாம்
நான் பள்ளிக் கூடத்தில் நிறைய நண்பர்களோடு விளையாடி இருக்கலாம்
நான் படிக்கும் பள்ளிக் கூடத்தில் விளையாடும் இடமில்லை
நான் படிக்கும் பள்ளிக் கூடத்தில் வகுப்பறையில்
ஓய்வு நேரத்திலேயே சில நேரங்களாவது விளையாடினேன்
விடுமுறை வேண்டாத நிலையை
அம்மாவின் பாதுகாப்பு அவசியமாக்கி விட்டது
No comments:
Post a Comment