Saturday, 28 April 2018

ஏன் இந்த கோபம்!

ஏன் இந்த கோபம்!  இப்படி ஏன் என்னை உதறி விட்டு எழுகிறாய் !

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.

Friday, 27 April 2018

பேத்தி நபீளா தீனியாத் மக்தப் மதரசா பரிசளிப்பு நிகழ்வில்

பெண் குழந்தைகள் ஆர்வ மிகுதியால் சான்றோர் நிறைந்த சபையில் பேச முயல்கின்றனர் .அவர்களை உற்சாகப்படுத்துவது நமது கடமை .அவர்களது சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அவர்களது ஆர்வத்தை தடுத்து விட வேண்டாம்
அன்புடன்

வெற்றி என்ன?


1 வருட வயதில் ... * வெற்றி. *
நீங்கள் ஆதரவு இல்லாமல் நடக்க முடியும்

* 4 வயதில் ... * வெற்றி. *
நீங்கள் உங்கள் உடையை சிறுநீர் கழிப்பதில்லை,

* 8 வயதில் ... * வெற்றி .. *
வீட்டிற்கு திரும்பும் வழியை அறிய

* 12 வயதில், * * வெற்றி .. *
நண்பர்கள் இருக்க வேண்டும்.

* 18 வயதில், * * வெற்றி. *
ஒரு ஓட்டுநர் உரிமம் பெற

வாழ்க்கை

 * வாழ்க்கையில், அதிர்ஷ்டம் மற்றும் அபாயங்கள் கணிக்க முடியாதவை, ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்று யாருக்கும் தெரியாது.


 தாயும் தந்தையும்  தவிர,  நல்வழியில் நடத்துவதற்கு யாரும் பொறுப்பு இல்லை.
நன்மையுணர்வோர்,  அதை புனிதப்படுத்த வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும், மேலும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு நபர்  நல்லது செய்தால், அவர்  உண்மையாக இருப்பார் என்று அர்த்தமல்ல.

இந்த  உலகில் இருந்தவை எதுவும் நம்மை தொடர்ந்து வருவதில்லை
இது  புரியும்போது, ​​நம்மை  சுற்றியுள்ளவர்கள் இனிமேல் நமக்கு  விருப்பமில்லையென்றாலும் அல்லது நாம் விரும்பியதை இழந்தபோதும் வாழ்க்கையில் நாம்  எளிதாகப் போகலாம்.


Monday, 23 April 2018

தாவாவும் தப்லிக்கும் !


தாவா என்றால் அறிவித்தல் தப்லிக் என்பது பரப்புதல் அதாவது இஸ்லாமிய வழிபடும் முறைகளும் மற்றும் அதன் கொள்கைகளையும் மக்களுக்கு ஏற்றி வைத்தல் என்பதாகும் . இதனை கையாளும் முறைப்பற்றி முஸ்லிம்களிடையே பல கருத்து வேறுபாடு உள்ளது . அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை .இங்கு தெரிந்த சில விளக்கம் தர விருப்பம். ஆண்டவன்தான் அதன் உண்மைநிலையை அறிவான் .

“தாவத்”- என்றால் அழைப்புப் பணியைச் செய்தல் ஆகும் . தாவத் என்பது தாவுதலாகாது .அதாவது மத மாற்றத்திற்கு செயல் படுவதாக கருதுவது மடமை, இஸ்லாம் சொல்லியபடி இறைவனை தொழும் மற்றும் அதன் நற்காரியங்களில் மற்றவர்களையும் ஈடுபட தங்கள் வசம் அவர்களயும் இணைந்துக் கொள்ளும்படி மக்களை மார்க்க வழியில்அழைப்பதுதான். இந்த தாவாவின் சிறப்பாகும் .இது நபிமார்களும் அவர்களது தோழர்களும் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களும் செய்த சேவையாக கருதப்படுகின்றது . முஸ்லிம் மக்களில் சிலர் இந்த தாவத் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் , அவர்களில் மிகவும் படித்தவர்களும்,செல்வந்தர்களும் அடங்குவர் .

கவனியுங்கள்

அழுகிறேன் ஆனால் நான் கண்ணீர் சிந்தவில்லை
யாரும் என்னை நினைக்கவில்லையாதலால்

ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?
நான் வலியை மறைக்க சிரிக்கிறேன்
என் சிரிப்பு சத்தமாக இருக்கிறது, ஆனால் கேட்க முடியாது

மின்சாரம் கிடைக்காததால் அலுவலகம் இயங்கவில்லை
வெளிக்காற்று வீசும்போது, ​​நான் தூங்குகிறேன்
ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?

 சாப்பிடுகிறேன் ஆனால் என் வயிறு நிரம்பியதில்லை
என்னைச் சுற்றியுள்ள உலகம் "ஆஹா!"
நான் "எப்படி?" அப்படி "ஆஹா!" என்றில்லை

Wednesday, 18 April 2018

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.

 உணவு மற்றும் அடிப்படை தேவைகள் அனைவருக்கும் மலிவாக கிடைக்க வேண்டும். இது அனைவரும் விரும்புவது.  இதற்கு  வழி என்ன?    எல்லோருக்கும் இது ஒரு கனவாக  காட்சி தருகின்றது. பல முயற்சிகள் அரசும் எடுத்து வருகிறது. அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது!    அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகள் மடமடவென உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது.  ஆட்சி செய்வோர்களின் முறை மட்டும்   இதற்கு  காரணமாகிவிடுமா!   அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பளத்தைக் உயர்த்திக் கொண்டே.  இருக்கும் போது, பொருட்களின் விலையும்  தொடர்ந்து  அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. அரசாங்கம் பெட்ரோல் விலையை  அதிகரிக்கிறது அதனால்  பொருட்களின் விலையும் அதிகமாகிறது. பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும் போது பொருட்களின் விலையில் எந்த குறைப்பும்  இல்லை. பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளை விலை அரசாங்கத்தின் கையில் ஆனால் வணிகர்கள் மற்றும்  மொத்த விற்பனையாளர் பொருள்களின் விலையை அதிகரிக்கும்  போது, அரசாங்கம் தடுத்து நிறுத்துவது கிடையாது .