உணவு மற்றும் அடிப்படை தேவைகள் அனைவருக்கும் மலிவாக கிடைக்க வேண்டும். இது அனைவரும் விரும்புவது. இதற்கு வழி என்ன? எல்லோருக்கும் இது ஒரு கனவாக காட்சி தருகின்றது. பல முயற்சிகள் அரசும் எடுத்து வருகிறது. அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது! அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகள் மடமடவென உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது. ஆட்சி செய்வோர்களின் முறை மட்டும் இதற்கு காரணமாகிவிடுமா! அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பளத்தைக் உயர்த்திக் கொண்டே. இருக்கும் போது, பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. அரசாங்கம் பெட்ரோல் விலையை அதிகரிக்கிறது அதனால் பொருட்களின் விலையும் அதிகமாகிறது. பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும் போது பொருட்களின் விலையில் எந்த குறைப்பும் இல்லை. பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளை விலை அரசாங்கத்தின் கையில் ஆனால் வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர் பொருள்களின் விலையை அதிகரிக்கும் போது, அரசாங்கம் தடுத்து நிறுத்துவது கிடையாது .
அரசு விதிகள் இருக்கலாம், ஆனால் அந்த விதிகள் மற்றும் சட்டங்களுக்கு இடுக்கினை கண்டுபிடித்து, கொடுக்க வேண்டியதனை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தனக்கே உகந்ததான முறைகளை கையாண்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலையை நிறுத்த முடியாத நிலைமையை உண்டாக்கி விடுகின்றனர். பொருள்களின் விலையை அதிகரிக்கும் போது ஒரு கடுமையான தண்டனை அவர்கள் மீது எடுக்கப்படும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள் . எச்சரிக்கை மட்டுமே பொருட்களின் விலை அதிகரிக்கும் வர்த்தகர்களை தடுக்க முடியாது! பொருட்களின் விலை ஏற்றம் என்பது தேவை மற்றும் விநியோகத்தினை சார்ந்தது. பொருட்கள் நிறைய கிடைக்கும் போது பொருட்களின் விலை குறைந்துவிடும். ஆனால் தேவை அதிகமாக இருந்து பொருட்கள் குறைவாக இருக்கும் போது பொருட்களின் விலை ஏற்றத்தினை யாராலும் தடுக்க முடியாது.
அரசாங்கத்தின் அடிப்படை பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகள் கட்டுப்பாட்டை எடுக்கும் போது மட்டும் தான் அரசு மட்டுமே அடிப்படை பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும். அரசாங்கத்தின் அடிப்படை பொருட்களை உற்பத்தி மற்றும் அவற்றை விற்பனை செய்ய ஈடுபடும் போது அரசு அடிப்படை பொருட்கள் கட்டுப்பாட்டை எடுக்கும். அரசாங்கம் எரிவாயு, மின்சாரம், வீடுகள், கல்வி, சுகாதாரம் போன்ற பொருட்களின் விலை கட்டுப்பாட்டை எடுக்கும். நம் அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் போன்ற அடிப்படை தேவைகளை உற்பத்தி செய்ய அனுமதி கொடுக்கும் போது தனியார் நிறுவனங்களின் நிர்வாகம் முறைபடுத்தப்பட்டு விற்பனை நிலையில் போட்டி ஏற்பட பொருட்கள் விற்கும் சந்தையில் மாற்றம் உண்டாகி விலை குறைய வாய்ப்புண்டு. செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்க சேவைகளை தனியார்மயமாக்குதலுக்கு கொடுப்பதோடு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் நல்ல வேலை நெறிமுறைகள் மற்றும் நடத்தைகள் கற்பிக்க வேண்டிய அவசியம் தேவைப்படுகின்றது. தனியார் துறையுடன் அரசுத் துறையும் போட்டி போட்டு உற்பத்தியை அதிகமாக்குவதுடன் தனியார் துறையை ஊக்குவிக்கவும் வேண்டும் மாறாக அதனை அழிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அனைவரும் எளிமையாக அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற வழி உண்டாக்கப் பட வேண்டும்.அது எளிமையான வழியாகவும் இருக்க வேண்டும். அதில் 'ஆயிரத்தெட்டு' விதிகளும் உண்டாக்கி கையூட்டு முறைக்கு வாய்பளித்து விடக் கூடாது.
அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.
திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும் மாறாக படித்த படிப்புக்கும் வேலை செய்த காலத்தின் அடிபடையில் வைத்து பணி உயர்வு கொடுப்பதினால் முன்னேற்றம் காண முடியாது . இது தனியார் துறையில் சாத்தியமாகின்றது. மேலை நாடுகளிலும் முன்னேற்றமடைந்த இம்முறையையே கையாள்கின்றனர். வேலையில் இருக்கும் போது ஆணவமான அதிகாரத்தினை கையாளாமல் அன்பான வழிகாட்டுதல் முறையையே கடைப்பிடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment