Saturday 28 April 2018

ஏன் இந்த கோபம்!

ஏன் இந்த கோபம்!  இப்படி ஏன் என்னை உதறி விட்டு எழுகிறாய் !

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.


கண்ணே கட்டியவள் இல்லாமல் இருக்கும் வாழ்வு கொடுமையானது
அன்பே உனை உயிராய் வைத்து கவணிக்க நீ பெற்ற மகள் இருக்கிறாள்
நீ இல்லையென்றால் என்னை கவணிக்க யார் இருக்கிறார்!
கணவனை விட பெற்ற மகள் உயிராக உன்னை நேசிப்பாள்

வேண்டாம் இந்த வீணான கற்பனை
வேண்டும் இந்த இனிய நேரம் மகிழ்வாக
இறப்பு வரும்போது வரட்டும்
இருக்கும்வரை இறையை நினைத்து இனிதாக மகிழ்ந்து வாழ்வோம்

No comments:

Post a Comment