Tuesday, 19 August 2014

பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை



பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை
பெரும்பான்மை தாழ்வு மனப்பான்மை பெற்று சிறுபான்மையை சோதிக்கின்றது
பெரும்பான்மை சிறுபான்மையை கண்டு கொள்ளாமல் சிதறடிக்க திட்டம் போடுகின்றது
சிறுபான்மை ஒன்று சேர பெரும்பான்மை சிறுபான்மையாகும்

குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர்களை சிறப்போடு கண்காணிக்க
சிறியோர்கள் பெரியவர்கள் ஆனபின் பெரியோர்களை கணிகோடு கண்காணிப்பர்
குடும்பமென்றால் பெரியோர்களும் சிறியோர்களும் அடங்கியதுதான்
நாடென்றால் பெரும்பான்மையும் சிறுபான்மையும் சேர்ந்ததுதான்
உடலில் ஒரு பகுதியில் புற்று நோய் வர உடல் முழுதும் பரவி உடலையே பாதிக்கும்
உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் உயர்வு
நாட்டில் ஒவ்வொரு மக்களும் உயர்வடைய வேண்டும்/In matters of conscience, the law of the majority has no place.
- Mahatma Gandhi/ தன்னலமற்ற அறிஞனின் இழப்பும் அவனுக்கு வெற்றிதான்
தன்னலமற்ற அறிஞன் இழப்பாக மற்றவருக்கு விட்டுச் செல்வது அவனது அறிவை

தன்னலம் கொண்டவனின் வெற்றியும் அவனுக்கு இழப்புதான்
தன்னலம் கொண்டவன் தான் பெற்ற அறிவை மற்றவருக்கு பகிர்வதில்லை

'உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைப்பவரே' - நபி மொழி

No comments:

Post a Comment