Monday 22 September 2014

பாணி பூரி


பள்ளிக்கூட வாசலில் பாணி பூரி விற்பவன்
பள்ளிச் சிறார்களுக்கு அதனை வாங்க நயமான வாரத்தைகள் சொல்லி அழைக்கின்றான்
செல்வந்தர் வீட்டு சிறார்கள் அதனை வாங்கி ஆசையோடு சாப்பிடுகிறார்கள்
அந்தக் கூட்டத்தில் கிழிந்த ஆடையோடு ஒரு பையன் பாணி பூரி வாங்க பணமின்றி மற்றவர்கள் சாப்பிடுவதையே பார்த்து நிற்கின்றான்
அவனது கண்களில் பான்பூரியை வாங்கி சாப்பிட முடியாத சோகம்
அவனுக்கு பசியால் அமிலங்கள் சுரக்க சிறிய வயிற்று வலி வருகின்றது
வலியை தாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல்கின்றான்

பாணி பூரியை வாங்கி சாப்பிட்ட செல்வந்தர் வீட்டு சிறார்களுக்கு
வீடு சென்ற பின் ஒவ்வாமையால் ,செரிமானம் வராமையால் வயிற்று வலி அதிகமாகின்றது
அவர்களை அழைத்துக் கொண்டு அக் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவரிடம் ஓடுகின்றார்கள்
பாதுகாப்புக்கு பல கோடி ரூபாய்கள்
சிலைகள் செய்ய கோடிகள்
நிலத்தடி நீர் வற்றும் நிலை உருவாக கோடிக் கணக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் உண்டாக்குதல்
ஓடும் ஆற்றை சுத்தமாக்க கோடிக் கணக்கில் ரூபாய்கள்
நீர் இருந்தும் அது ஓடாத ஆறுகளுக்கு கால்வாய் சரிபடுத்தப் படாமல் நீர் விரயமாதல்
மருத்துவச் சாலைகள் இருந்தும் போதிய மருத்துவரும் ,மருந்துகளும் கிடைப்பதில்லை
இன்னபிற...
மின்சாரம் போய் விட்டது தொடர்ந்து எழுத ....
மின்சார பற்றாக் குறை
உடலுக்கு குருதி ஓட்டம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு மின்சாரம் அவசியம் நாட்டுக்கு

No comments:

Post a Comment