Wednesday, 10 September 2014

இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

காட்டில் விலங்குபோல் அலைந்த மனிதன்
நாட்டிற்கு வந்ததால் சமூக விலங்கானான்

கருத்துகள் கொள்கைககள் மனிதனை வசப்படுத்துகின்றன
ரொட்டியும் வெண்ணையும் நிறைந்து கிடைக்க சித்தார்தங்கள்,கொள்கைகள் மறைந்து விடுகின்றன

மனிதன் உணர்ச்சியின் உணர்வுகளால் உந்தப் படுகின்றான்
மனிதனின் உணர்ச்சிகள் மாறுபட்டதாய் அமைந்து விடுகின்றன

உணர்ச்சிகள மற்றவர்களால் வர உறவையும் நட்பையும் மேன்மையாக்குகின்றன
உணர்ச்சிகள தன்னிலை சார்ந்திருக்க உணர்வுகள் அவனை ஆள்கின்றன

உலகம் கருப்பு வெள்ளையால் மட்டும் உருவாக்கப் படவில்லை
உலகம் பல நிறங்களால் உருவாக்கப் பட்டு அழகுமயமாய் காட்சி தந்து மகிழ்விக்கின்றது

உலகில் பல நிறம் கொண்ட மனிதர்கள்
உலகில் பல வித மார்க்கங்கள்

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உயர்வாய் இருக்கின்றது
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருந்தால்தான் சிறப்பு

மாறுபட்டதை விரும்பாத மனிதர்கள்
மாறுபட்டவர்களின் மீது வெறுப்பை கக்குகின்றனர்

இறைவனது படைப்பின் அருமையை அறியாதோர்
மறைமுகமாக மற்றும் நேர் முகமாக விரோதம் காட்டுகின்றனர்

இறைவனால் படைக்கப் பட்ட உலகம்
இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

அன்பை அள்ளிப் பருகுங்கள்
அன்பை வாரி வழங்குங்கள்
அதுவே இறைவனின் இருப்பிடம்

1 comment:

  1. அன்பை அள்ளிப் பருகுங்கள்
    அன்பை வாரி வழங்குங்கள்
    அதுவே இறைவனின் இருப்பிடம்//உண்மை

    ReplyDelete