Monday, 8 September 2014

மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு



கொடியில் கண்ட மலரை
கூந்தலில் சூட்டியதால்
மலரின் மணம் பரவ
மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு தர
அசையாத மனதையும் அசைக்க வைத்தது

அசைந்தாடி நடந்து வரும் மாதின் நடை நளினமாக காட்சித் தந்தது
நெருங்கி வந்த மாதிடம் பேச வார்த்தைகள் வர மறுத்தது
நெருங்கி வந்த மாது காத தூரம் சென்றிருப்பாள்
குறுக்கே வந்த வண்டி அவளை சிதைத்துச் சென்றது
கசங்கிய மலராய் அவள் அழகு அழிந்துப் போனது

அழகுக்கு மயங்கும் மனம்
அழகு அதனிடத்தை விட்டுப் போக
லயிக்கும் மனம் அவனை விட்டு அகன்றது
அழகுக்காகவே நேசிப்போனின் மனம் பொய்மையானதாய் போனது

உள்ளத்தின் உயர்வாய் வந்த நேசம்
குணங்களை பற்றி நிற்கும்
அழகு மனதைப் பற்றியது
கசங்கிய மலரிலும்
நொறுங்கிய துகள்களிலும்
பண்பட்ட மனதினால் அழகை பார்க்க முடியும்
அழகும்,பாசமும் ,நேசமும் ,காதலும்
எல்லைக்கும் காலத்திற்கும் உட்பட்டதல்ல
Mohamed Ali

No comments:

Post a Comment