இல்லை என்பது குற்றமில்லை இல்லாதவரை
இல்லை என்பது குற்றமாகிவிட்டது
இருப்பதை இல்லை என்று சொல்லிவிடுவதால்
இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லச் சொல்கின்றாய்
இருந்துக்கொண்டே இருப்பேன்
இரு வருகிறேனென்று சொல்லும்வரை
இயலாததையும் இயல வைப்பேன் நீ இருக்கும்வரை
இய்லாதவனாகி விடுவேன் நீ இல்லாத நிலை வர
இருந்துக்கொண்டே இரு நான் இருக்கும்வரை
போகிறேன் என்றாய்
போகிறேன் என்ற சொல்லே பிடிக்காதது
போய் வருகிறேன் என்று சொல்
போனாலும் மனதினுள்ளே இருந்து வாட்டுவாய்
போகாமல் இருந்தாலும் உள்ளே இருந்து வாட்டுவாய்
No comments:
Post a Comment