Monday, 19 January 2015
வாழ்க்கைக்கு துணையாக திருமணம் செய்துக் கொள்
வாழ்க்கையை கொடுத்தவன் இறைவன்
இணை இணையாக படைத்தவனும் இறைவன்
"நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? மேலும், உங்களை இணை இணையாக (ஜோடி ஜோடியாக)ப் படைத்தோம். உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்; அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்; மேலும், பகலை உங்கள் வாழ்வாதாரங்களைத் தேடிக் கொள்ளும் காலம் ஆக்கினோம். உங்களுக்கு மேல், பலமான ஏழு வானங்களை உண்டாக்கினோம்; ஒளி வீசும் விளக்கை (சூரியனை)யும் அங்கு வைத்தோம். அன்றியும், கார் மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்; அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் வெளிப்படுத்துவதற்காகவும், கிளைகளுடன் அடர்ந்த சோலைகளை வெளிப்படுத்துவதற்காகவும்!' (அல்-குர்ஆன் 78: 6-16)
வாழ்க்கைக்கு துணையாக திருமணம் செய்துக் கொள்ள சொல்பவர் நாயகம்
திருமணம் செய்துக் கொள்ளாதவர் நபி வழியை பின்பற்றாதவராகி விடுகிறார்
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் எனது வழிமுறை (சுன்னத்) ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
''வாலிபர்களே உங்களில் யார் (உடல் மற்றும் ஏனைய) சக்தி பெறுவாரோ அவர் திருமணம் முடித்துக் கொள்ளட்டும். நிச்சயமாக அது (திருமணம்) கற்பைக் காத்துக் கொள்வதற்கும், பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுவதற்கும் (போதுமானது).....''
நூல்: புகாரி 5065, முஸ்லிம் 1400 )
இத்தனையும் அறிந்து வாழ்க்கைத் துணையின்றி வாழ்தல் முறையோ !
வாழ்க்கை துணையின்றி வாழ்தல்
காய்க்காத மரம்
பூக்காத செடி
வாசனையில்லா மலர்
பெண் பூப்பெய்தினால் திருமணம் செய்விக்க தகுதியானாள்
மரம் பூவைத் தர காயாகி பழமாகின்றது
பசத்தின் விதை மரத்தை உருவாக்குகின்றது
செடியின் பூ மகரந்த சேர்க்கை உருவாக வழி தருகின்றது
அனைத்தும் அடுத்ததை உருவாக்க உலகம் செழிக்கின்றது
வாழ்க்கைத் துணையும் உலகத்தில் அவசியமாகின்றது
வாழ்க்கைத் துணையின்றி தவித்தல் கொடுமை
வாழ்க்கைத் துணை வாழ்வில் பிடிப்பை தருகின்றது
வாழ்க்கைத் துனையோடு வாழ்வாங்கு வாழ்வோம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். -குறள் 50:
(மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் வாழ்வோரில் உயர்ந்தோராக வைக்கப்படுவான்.)
#வாழ்க்கைத்துணை
Mohamed Ali
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment