Saturday, 18 November 2017

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை. நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.
தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.
தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார். அல்லாஹ்வின் அருளால் 1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.

அவருக்கு பாடல் தந்த கவிஞர்கள்.
கவிஞர் கிளியனூர் அப்துஸ் ஸலாம். கவிஞர் ஹாபிஸ் பாருக் பஜ்லி, தேங்கை சர்புதீன் மிஸ்பாஹி, வடகரை அலி , தேரிழந்தூர் ஜக்கரியா,K.R.M.ஜியா, கீழக்கரை முஹம்மது சுல்தான் இக்பால் ,
கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், வடகரை B C C M ஷேக் மற்றும் பலர்.
எனது உடன் பிறந்த அண்ணன்
நீடூர் வழக்கறிஞர் A.M.சயீத் B.A.B.L அவர்கள் அவரை பிரபலப் படுத்தியவரில் முக்கியமானவர்.



S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

No comments:

Post a Comment