Thursday, 23 November 2017

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........
அருளாளன் அளவற்று கேட்டதையும் கேட்காததையும் கொடுத்தான்
அவனிடத்தில் வலுவான அறிவை கேட்காமல் விடுத்தேன்
அவனுக்கென்ன அவன் அவனை நேசிப்பவர்களுக்கும் நேசிக்காதவர்களுக்கும் இவ்வுலகில் தருவதில் தயக்கம் காட்டுவதில்லை
கேட்டதுதான் கேட்டேன் அறிவை அதிகமாக கேட்காமல் விட்டேனே
அபிவிருத்தி செய்யப்படாத அறிவால் அவனால் கிடைத்தவைகள் சிக்கல்களால் ,சிரமங்களால் சீக்கிரமே வலுவுள்ளவர்களால் பறிக்கப்பட்டன
அவன் அறிவான் என் தேவைகள் என்று அவனை தொழுது
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

என்று பிரார்த்தனை செய்வதோடு
இறைவன் நாடினால் அவன் தரும்
ஞானத்தின் மகிமையால் நிறைவு (பரகத்)அடைவேன்
பெற்ற அறிவு பொறுமையைத் தரும்
பெற்ற அறிவு பெருமையைத் தரும்
பெற்ற அறிவு பல்கிப் பெருகும்
ஆண்டவன் நினைவு மனதில் நிலைத்து நிற்கும்
ஆணவம் அடங்கி மங்கிப் போகும்
இருலோகப் பயனைப் பெற்றுத்தரும்
-------------------------------------------------------------------------------
“(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்;
- குர்ஆன் 2:32.
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا
ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
- குர்ஆன் 20:114.

No comments:

Post a Comment