Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Monday, 17 November 2014

பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

அன்பு ,பாசம் ,நேசம், காதல் அனைத்தும் இதயத்தின் வெளிப்பாடு
இதயத்தின் உணர்வுகள் இயல்பாய் உந்தப்படுவது
மழையால் கொட்டப்படும் நீரை தடை போட்டு நிறுத்த முடியாது
இதயத்தில் வெளிப்படும் நேசத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது

நேசம் ஒரு தெளிந்த நீரோடை
நேசத்தை நெஞ்சத்தில் நிறுத்தி வைக்காமல்
நேசத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்

Wednesday, 10 September 2014

இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

காட்டில் விலங்குபோல் அலைந்த மனிதன்
நாட்டிற்கு வந்ததால் சமூக விலங்கானான்

கருத்துகள் கொள்கைககள் மனிதனை வசப்படுத்துகின்றன
ரொட்டியும் வெண்ணையும் நிறைந்து கிடைக்க சித்தார்தங்கள்,கொள்கைகள் மறைந்து விடுகின்றன

மனிதன் உணர்ச்சியின் உணர்வுகளால் உந்தப் படுகின்றான்
மனிதனின் உணர்ச்சிகள் மாறுபட்டதாய் அமைந்து விடுகின்றன

Monday, 22 July 2013

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிணக்கு விவாகரத்தின் முடிவா!

கணவன் மனைவிக்குள் அளவிலா அன்பும் அறியமுடிய, அறியமுடியா பிணக்கும் வருவதுண்டு .
கணவன் மனைவிக்குள் இருக்கும் அளவிலா அன்பினை மறைத்து வாழ்வார்.
கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனைகளை, பிணக்குகளை மட்டும் தங்கள் உறவினர் நண்பர்களிடம் சொல்வதை அல்லது காட்டிக் கொள்வதை தயங்குவதில்லை .

கணவன் மனைவிக்குள் வந்துள்ள பிரச்சனைகளை, பிணக்குகளை முறையாக நன்னோக்கம் கொண்டு தீர்த்து வைக்க முயல்பவர்கள் குறைவு . சமாதானம் செய்ய வருபவர்கள் உணர்ச்சி வசப் படுபவர்களாகவும் ஒரு பக்கம் சார்ந்தவர்களாகவும் மாறி விடுகிறார்கள் .

கணவன் அல்லது மனைவி தங்களுக்குள் இருக்கும் உயர்வை மட்டும் நோக்காமல் தங்களிடம் உள்ள குறைகளையும் அறிய வேண்டும் . குறை அறிந்தால்தான் திருத்திக் கொள்ள முடியும். குறை உடையவர்களின் குணமறிந்து வாழ்கையை தொடர முடியும் .நல்லதும்,கெட்டதும் சேர்ந்தும் ஒரு பொருளுக்கு இருப்பதுபோல் ஒரு மானிடருக்கும் உண்டு என்பதனை நாம் மறக்கிறோம் . ஒரு பொருள் பழுதானால் சீர் படுத்த நாம் எடுக்கும் முயற்சியை மானிடரின் குணத்திற்கு வரும் அழுக்குகளை சீர் படுத்த நாம் முயல்வதில்லை .
அவசர முயற்சி ஆபத்தில் முடியும் . அவசர முடிவும் விவாகரத்தில் முடியும் .


கணவனும் மனைவியும் ஒரு உடன்படிக்கையின் வாழ்வைத் தொடங்கினாலும் தொடங்கும் போது யாரும் உடன்படிக்கை முறிவைப் பற்றி நினைப்பதில்லை . சேர்ந்து இணைந்து வாழவே இல்லறத்தினை தொடக்கி இறக்கும் வரை பொறுமை, அன்பு ,காதல்,பாசம் இவைகளால் பிணைக்கப் படுகிறார்கள் . இடையூருகளை தம்பதிகள் எதிர் கொள்ளும் ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பது அவசியம். மற்றவர்களால் வரும் இடையூருகள் அவர்களை பிரித்து விடாமல் மற்றவர்கள் அவர்களை இணைந்து வாழ உறுதுணையாக இருப்பது மற்றவர்களின் கடமை

(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)

Thursday, 28 March 2013

கடமையச் செய்து கேட்பது உயர்வு

அளவற்ற அருளாலனாய்
நிகரற்ற  அன்புடையோனாய்
நிலையாய் நிலைத்துருப்பவனாய்
நிறைந்த மனதுடையவனாய்
நினை நினைத்தோர்  மனதில் நிறைந்தவனாய்
நினை யல்லால் யாரை வைத்து தொடங்குவோம்
நினை விடுத்து யாரிடம் யாம் யாசகம் கேட்போம்

உமை முழுமையாக அறிந்து விட்டால் தொல்லை ஏது! துயரமேது!
உமை நாடியோருக்கு நன்மையே செய்வாய்
உம்மிடம் வேண்டியவர்க்கு  செய்தவையும்  நன்மையாக இருக்கும்
உம்மை நாடி  வேண்டியவர்க்கு செய்யப்படாமல் விட்டமையும் நன்மையாகவே  இருக்கும்

உமை நாடி கேட்பதும் உமை நினைத்து தொழுவதும் யம்மிடமிருக்க
உமையல்லால் யாரை தொழுவோம்
உமையல்லால் யாரிடம் கேட்போம்
உமக்கு இணையாக யாரையும்  சிந்திக்க மனம் வருமோ!

உம்மிடம் கேட்பது யம் கடமை
கடமையச் செய்து கேட்பது உயர்வு
கிடைத்தாலும் மகிழ்வோம்
கிடைக்கவில்லையென்றாலும் மகிழ்வோம்