Showing posts with label நேசம். Show all posts
Showing posts with label நேசம். Show all posts

Monday, 17 November 2014

பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

அன்பு ,பாசம் ,நேசம், காதல் அனைத்தும் இதயத்தின் வெளிப்பாடு
இதயத்தின் உணர்வுகள் இயல்பாய் உந்தப்படுவது
மழையால் கொட்டப்படும் நீரை தடை போட்டு நிறுத்த முடியாது
இதயத்தில் வெளிப்படும் நேசத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது

நேசம் ஒரு தெளிந்த நீரோடை
நேசத்தை நெஞ்சத்தில் நிறுத்தி வைக்காமல்
நேசத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்

Monday, 8 September 2014

மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு



கொடியில் கண்ட மலரை
கூந்தலில் சூட்டியதால்
மலரின் மணம் பரவ
மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு தர
அசையாத மனதையும் அசைக்க வைத்தது

அசைந்தாடி நடந்து வரும் மாதின் நடை நளினமாக காட்சித் தந்தது
நெருங்கி வந்த மாதிடம் பேச வார்த்தைகள் வர மறுத்தது
நெருங்கி வந்த மாது காத தூரம் சென்றிருப்பாள்
குறுக்கே வந்த வண்டி அவளை சிதைத்துச் சென்றது
கசங்கிய மலராய் அவள் அழகு அழிந்துப் போனது

Friday, 1 August 2014

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

காதலை அறிந்துக் கொள்ளவில்லை
காதல் அழகில் அடங்கிப் போனதாக அறிவு மங்கிப் போனது

அழகை நாடி அலைபாயும் மனம்
உண்மையை நாடாமல் சிதைந்துப் போனது

காதல் நேசத்தில் உள்ளடங்கியதனை
சேவை இதயத்தின் ஒளியானதென்பதனை
கடந்த காலங்கள் உணர்த்திவிட்டன

இனி இருக்கப் போகும் வாழ்வில்
உன்னோடு உயர்வாக வாழ்வை தொடர்வேன்

நேசிக்கின்றேன் உன்னை உயிர் உள்ளவரை
நேசிகின்றேன் உன்னோடு இருப்போரையும்

உங்களுக்கு சேவை செய்வதிலேயே
எந்தன் மனம் உவகை கொள்ளும்

Wednesday, 25 December 2013

என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன் !

நீங்கள் என்னை நேசிக்க
நான் உங்களை நேசிக்காமல் போனதால்
நீங்கள் என்னை விடுத்து போனீர்கள்
நான் வெளிப்படுத்திய செயல்கள்
நான் உருவாக்கிய இழப்பு என்று இப்போது அறிகின்றேன்

நீங்கள் வெளித்தோற்றத்தில் மனத்தைக் கவரவில்லை
நீங்கள் உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
உங்கள் மடல், உங்கள் உள்மனதில் கொண்டிருக்கும் நேசத்தினை
என்னை உங்கள் மீது உருவக வழியில் உங்களை நேசிக்க வைக்கிறது
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய தாள்களை கிழித்ததை ஒன்று சேர்க்கிறேன்
என்னைப் பற்றி நீங்கள் எழுதிய பாடல் , கவிதை மற்றும் உரைநடைகள்
என் மனதை உருக வைத்துள்ளது
என் விழிகள் அருவிபோல் நீரைக் கொட்டுக்கின்றன
திடீரென்று ஒரு பஞ்சம் நாட்டிற்க்கு வந்ததுபோல்
திடீரென்று ஒரு தனிமை உணர்வு எனக்குள் வந்து விட்டது

என் மிதக்கும் மனதில் பெரிதும் அமர்ந்து கொண்டு
உங்கள் உருவம் அசைந்தாடுகிறது
நீங்கள் இல்லாத நிலையில்
என் உலகம் இருண்டதாக இருக்கின்றது
என் உலகம் ஒளி பெற உங்கள் வரவை வேண்டுகின்றேன்

Sunday, 29 September 2013

நான் எப்பொழுதும் இளமை!



நான் எப்பொழுதும் இளமை
நான் முதுமையிலும் இளமையாக இருக்கிறேன்
நான் பெற்றிருக்கும் மனம் இளமையானது
நான் பெற்றிருக்கும் இந்த இளமை இனி கிடைக்க வாய்ப்பில்லை

நான் பழகும் மக்கள் இளமையான எண்ணம் கொண்டவர்கள்
நான் பழகும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் மக்கள் குறை கூறி என்னை துன்பத்தில் முடக்குவதில்லை
நான் சந்திக்கும் மக்கள் குறையை குலைத்து நிறைவை தருகிறார்கள்

நான் பெற்றிருக்கும் நேரம் உயர்வானது
நான் பெற்றிருக்கும் நேரத்தை உயர்வாக்கவே விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மக்களை மகிழ்வோடு இருக்க விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மனது உயர்வு தாழ்வு என்று மக்களை வேறு படுத்த நினைக்கவில்லை