Showing posts with label ஆசை. Show all posts

Friday, 8 May 2015
Wednesday, 5 March 2014
பெண்களுக்கு சின்ன சின்ன ஆசை!
அழகிய கணவன் அமைய ஆசை
சீர் வரிசை விரும்பாத கணவன் கிடைக்க ஆசை
பணம் கேட்காத மாப்பிள்ளை வீட்டார் வர ஆசை
மணமகன் செலவிலேயே நடக்கும் திருமண விருந்தும் நடக்க ஆசை
திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் விரும்பும் கணவன் வர ஆசை
வெளிநாட்டில் வெண்ணிலவு கொண்டாட ஆசை
வைர கல் மோதிரம் கணவன் பரிசாக கிடைக்க ஆசை
அழகிய குழந்தை பெற ஆசை
குழந்தை வெண்ணிலவில் உண்டாக ஆசை
குழந்தை ஆங்கில பள்ளிக்கூடத்தில் (கான்வென்டில்) படிக்க வைக்க ஆசை
குழந்தையை அழைத்து செல்லும் பொறுப்பான கணவன் வர ஆசை
கணினி வேலையில் பெரிய சம்பளம் வாங்கி சேமிக்கும் மாப்பிள்ளை வர ஆசை
Saturday, 19 October 2013
எங்கிருந்தோ வந்தாய் !
என்னுள் புகுந்து விட்டாய்
என்னை அடக்கவும் செய்தாய்
என்னை ஆளவும் செய்தாய்
எனக்கென்று ஒரு கொள்கை
எனக்கென்று ஒரு ஆசை
எனக்கென்று இருந்ததை இழந்து
எனக்கென்று இருந்தது உன் பிடியில்
உண்மை உறைக்க பொய் என்கிறாய்
பொய் உறைக்க உண்மை என நம்புகிறாய்
மை போட்டு என்னை மயக்கினாயோ!
உண்மை உன்னில் அடக்கமோ
உன் கண் அசைப்பில் அடங்கிய என்னை
உன் கண்காணிப்பில் இருக்கச் செய்கிறாய்
உன் போக்கில் நான் இருக்கச் செய்ய
என் போக்கு என்னை விட்டு அகன்றது
Saturday, 21 September 2013
ஆசையை முறைபடுத்தச் சொன்னது அறிவு
ஆசைப் பட ஆசை
ஆசைக்கு அளவே இல்லை
ஆசை நிறைவேற அசைவு தர ஆசை
ஆசை நிலைத்து நிற்க ஆசை
ஆசை அசைந்து வர ஆசை
ஆசைப் பட்டது விரைந்து வர ஆசை
ஆசை அற்ற நிலை தேக்கத்தை தருகின்றது
ஆசை பெற்ற நிலை வேகத்தை தருகின்றது
உயர உயர ஆசை
உயர்ந்தது உருவாக்க ஆசை
ஆசை உயிரோடு நிற்கிறது
ஆசை அற்ற நிலை உயிரை நிறுத்திக் கொள்வதில்லை
ஆசை பேராசையாக மாற வேதனை வந்து விட்டது
ஆசைப்பட்டதை அடைய அவதி வர விருப்பமில்லை
ஆசைப்பட்டதை அடைய உயர்வு தாழ்வு வந்து சேரும்
ஆசைப்பட்டால்தானே அசைவு யென்று ஒன்றிருக்கும்
ஆசையை உண்டாக்கிய மனது
ஆசையை முறைபடுத்தச் சொன்னது அறிவு
ஆசை நேசத்தோடு நிற்க மகிழ்வை சேர்ந்துக் கொண்டது
ஆசை இறை நேசத்தோடு நெருங்கி மாட்சிமை கொண்டது
Saturday, 1 June 2013
வீட்டில் உள்ளவர்க்கும் ஓர் ஆசை வந்து விட்டது.
'எல்லோரும் கார் வைத்திருக்கிறார்களே நாமும் ஒரு புதிய கார் வைத்திருந்தால் வசதியாக இருக்கும் அத்துடன் சமுதாயத்தில் ஒரு மதிப்பு கிடைக்கும்'
'கார் வாங்குவதற்கு தேவையான பணமில்லையே!'
'அதான் இன்சால்மெண்டில் தருகின்றார்களே'
'இன்சால்மெண்டில் வாங்கினால் இன்சால்வென்ட் ஆக வேண்டிய நிலை வந்துவிடும்'
'நீங்கள் நல்லதே நினைக்க மாட்டீங்களா! விருப்பமில்லையென்றால் விடுங்கள்'
வீட்டில் நடந்த விவாதத்திற்குப் பின் ஒரே குழப்பம். நம்மீது அக்கறையுள்ள அண்ணனிடம் சென்று ஆலோசனைக் கேட்டேன்.அவருக்கு கார் வைத்திருந்த அனுபவமுண்டு.
'உனக்கு யாராவது வேண்டாதவர்கள் இருந்தால் அவருக்கு ஒரு கார் இனாமாக வாங்கிக் கொண்டு. அதிலேயே அவர் பல தொல்லைக்கு ஆளாகிவிடுவார்' என்றார். அவர் சொன்னதை வீட்டில் சொன்னேன்.
'அவங்கெல்லாம் கார் வைத்திருக்காங்க நாமும் கார் வாங்கினால் நமக்கு மதிப்பு கூடிவிடும் என்ற நினைப்போ!'
கார் வாங்கியாச்சு. பெட்ரோல் போட்டு பணம் கரைய சிறிது சிறிதாக குடும்பத்தில் பணப் பற்றாக்குறை தொடங்கி விட்டது.கட்டுப்படுத்தாத மனது கவலையை தந்தது . (அதிக) ஆசையே துன்பத்திற்குக் காரணம்
கார் உரிமையாளர் உண்மை செலவு
ஒரு கார் வாங்க விரும்புவர்கள் முதலில் சித்திக்க வேண்டியது.
ஒரு கார் செலவு கொள்முதல் விலையில் முடிவடையவில்லை என்று நன்கு கவனமாக இருக்க வேண்டும். தேய்மானம், எரிபொருள் செலவுகள், காப்பீடு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல், மற்றும் விற்பனை வரி: இது போன்ற கூடுதல் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

Wednesday, 10 April 2013
அற வழியில் ஆசைப்பட்டு அடுத்த அடி தொடரு...
ஆசை வேண்டும் அது நிறைவேற வேண்டும்
ஆசை வேண்டும் அது நிறைவேற வழி தேட வேண்டும் .
ஆசை வேண்டும் அது பேராசையாக இருக்காமல் இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அடுத்தவர் பொருளை அபகரிக்காமல் இருக்கும் நிலை வேண்டும்
ஆசை வேண்டும் விரும்பிய பொருள் தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் இருக்க வேண்டும்
ஆசை வேண்டும் அது ஆண்டவன் அருளை நாடி இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அது நிராசையானால் மனம் தளரா உள்ள உறுதி வேண்டும்
ஆசை உண்டாக்கி ஏமாற்றும் மனம் பெறாத ஆசை வேண்டும்
ஆசைப் படுவது மனித இயல்பு .ஆசையற்றோர் முன்னேற்றம் அடைய வழியேது.
ஆசையற்றோர் நிலை தேக்கம் காணும் .ஆசை துன்பத்தை வரச் செய்யும் என்போர் வாழ்கையை விளங்கிக் கொள்ளாதவர். தனி மரம் தோப்பாகாது .தனித்து வாழ விரும்புவோர் தனித்து விடப்படுவார் . அது அவருக்கும் பயன்தராது அவரால் மற்றவரும் பயனடைய மாட்டார் .
ஆசைப்பட்டதால் சமுதாயம் வளர்ந்தது. ஆசை உள்ளத்தோடு இளவயதிலேயே தொடங்கியது. முதல் மனிதர் ஆதம் அவ்வா மேல் ஆசை கொள்ள வைத்தது இறைவனின் நாட்டம் . அது முதல் தொடங்கிய காதலின் ஆசை உலகம் இருக்கும் வரை நீடிக்கும் அதனால் சமுதாயம் பெருகும் .
மரணிப்பதை நேசிக்காதே ,கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது,தற்கொலையை
நாடுவது பலவீனத்தின் அறிகுறி. கொள்கை மீது நம்பிக்கை அற்ற நிலை.
நம்பிக்கை இல்லாத கொள்கை விரயம். கொள்கை .உயர்வானதாக இருத்தல் அவசியம். நினைத்ததை முடிக்கும் வரை நம்பிக்கையை நிலை நிறுத்தி போராடு. அதற்கு வாழ்வை நாடு. .நினைப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வேண்டும் அது வரும்போது வரட்டும் .கொள்கை பிடிப்பும் அந்த கொள்கை உயர்ந்த கொள்கையாக மட்டும் இருப்பது மிகவும் அவசியம்

Subscribe to:
Posts (Atom)