Wednesday 5 March 2014

பெண்களுக்கு சின்ன சின்ன ஆசை!


அழகிய கணவன் அமைய ஆசை
சீர் வரிசை விரும்பாத கணவன் கிடைக்க ஆசை

பணம் கேட்காத மாப்பிள்ளை வீட்டார் வர ஆசை

மணமகன் செலவிலேயே நடக்கும் திருமண விருந்தும் நடக்க ஆசை

திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் விரும்பும் கணவன் வர ஆசை

வெளிநாட்டில் வெண்ணிலவு கொண்டாட ஆசை

வைர கல் மோதிரம் கணவன் பரிசாக கிடைக்க ஆசை
அழகிய குழந்தை பெற ஆசை

குழந்தை வெண்ணிலவில் உண்டாக ஆசை

குழந்தை ஆங்கில பள்ளிக்கூடத்தில் (கான்வென்டில்) படிக்க வைக்க ஆசை
குழந்தையை அழைத்து செல்லும் பொறுப்பான கணவன் வர ஆசை

கணினி வேலையில் பெரிய சம்பளம் வாங்கி சேமிக்கும் மாப்பிள்ளை வர ஆசை

தனக்கு தனியே ஒரு கார் வைத்திருக்க ஆசை

கணவர் குழந்தையை கான்வென்டில் கொண்டு விட்ட பின்

கணவன் அலுவலகம் செல்ல தனியே ஒரு கார் இருக்க ஆசை

அழகு சாதனங்களும் சேமிப்புகளும் சேர்த்து வைக்க ஆசை

விடுமுறை நாளில் குடும்பத்துடன் பெரிய நட்சத்திர விடுதிக்கு சென்று

 விருந்து உண்ண பணிந்து செல்லும் கணவன் கிடைக்க ஆசை

சேர்த்து வைத்த பொருளை விற்காத கணவன் கிடைக்க ஆசை

இணைந்த கணவன் இறுதி வரை தனது சொல் கேட்க ஆசை

கட்டிய கணவன் விட்டுப் போகாமல் இருக்க ஆசை

கணவன் இப்படி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த அருள்.

1 comment:

  1. அருளோடு முடித்தமைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete