Showing posts with label இனாம். Show all posts
Showing posts with label இனாம். Show all posts

Saturday, 25 January 2014

. 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.

ஒரு நாள்  ஒரு பூ வியாபாரி முடிதிருத்தகம்  சென்றார். முடி வெட்டிய பிறகு   பூ வியாபாரி முடிதிருத்துபவரிடம் பணம் கொடுத்தார் . 'நான் பணம் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்'.என்றார் அந்த நாவிதர்.


அடுத்த நாள் காலை, முடி திருத்தும் கடை திறக்க சென்ற போது ஒரு வாழ்த்து  அட்டை 'நன்றி' என்று எழுதி  இருந்தது மற்றும் ஒரு டஜன் ரோஜாக்கள் ஒரு பையில் இருந்தது

அன்று ஒரு மளிகை கடைக்காரர் முடி வெட்டிக்கொள்ள வந்திருந்தார். முடி வெட்டி முடிந்தவுடன்  மளிகை கடைக்காரர்  முடிதிருத்துனரிடம் அதற்குரிய பணம் கொடுத்தார் அதற்கு அந்த நாவிதர் 'மன்னிக்கவும் நான் இந்த வாரம் சமூக சேவை செய்கிறேன்' அதனால் தயவு செய்து பணம் கொடுக்க வேண்டாமென்றார்.  அதற்கு மரியாதை கொடுத்து மளிகை கடைக்காரர்  நன்றி சொல்லி விட்டு சென்றார் . அடுத்த நாள் முடித்திருத்தகம் திருக்கும்போது 'தயவுசெய்து எனது அன்பான அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற வாசகத்துடன் ஒரு  வாழ்த்து அட்டையுடன்  ஒரு பை நிறைய மளிகை பொருள்களும் இருந்தன.

Monday, 13 May 2013

சமைக்க தெரியாது. ஆனால் சமைத்ததனை சுவைக்க தெரியும்.

இனாம் அல்லது  தர்மம் ஒரு நன்மையான செயல்.

இனாம் பெறுவது விரும்பத் தகாத செயல்

இனாம் கொடுப்பது உயர்த்த செயல்

(ஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.)

இனாமும் அன்பளிப்பதும் ஒன்றாகாது .

இனாம் கொடுப்பவரும் அன்பளிப்பு கொடுப்பவரும் விரும்பி செயல்படும் முறை. இரண்டும் மகிழ்வைத் தரும்.

இனாம் வாங்குபவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர் . தாழ்ந்த நிலையில் உள்ளவரும் இனாம் கொடுக்கும் மனம் படைத்தவராகவும் ,இறக்கம்  உள்ளவராகவும் இருக்கலாம் .

இப்பொழுது உள்ள நிலை இனாமுக்கு ஆதாயம் தேடும் நிலைக்கு மாறிவிட்டது .

Tuesday, 2 April 2013

தாவுதலும் பெருமையாக சொல்லப்படும்!

நாணயமின்றி நம்பிக்கை ஏது ?
நாணயமும் நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கம்

நன்னம்பிக்கை நாணயத்தினரோடு
நம்பிக்கையற்ற தன்மை நாணயமற்றோடு

உண்மை ஒன்றிருக்க பொய் ஒன்றிருக்கத்தானே செய்யும்
கவிதை ஒன்றிருக்க பொய்யும் மெய்யும் கலக்கத்தானே செய்யும்

தவறு  ஒன்றிருக்க தண்டனை கிடைக்கத்தானே செய்யும்
தண்டனை குறைவாக இருக்க குற்றம் பெருகத்தானே செய்யும்