Showing posts with label ஒற்றுமை. Show all posts
Showing posts with label ஒற்றுமை. Show all posts

Wednesday, 3 December 2014

பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

 
வெளிநாட்டில் போய் பிழைப்பை தேடலாம்
வெளிநாட்டிலிருந்து பணம் வரலாம்
வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வரலாம்

இந்நாட்டு மூத்த குடி வெளிநாட்டோடு போய்விட வேண்டுமாம்
ஓரினம் ஓர் மக்கள் இதுவே சங்க கால மக்கள் குணம்
பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

இரண்டு விழுக்காடு உள்ளவர்கள்
உரிமை கொண்டாடி மற்றவர்களை வெளியேற்றும் முயற்சி

ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்ததால்
போங்கப்பா மற்ற கண்டத்திற்கு என்று பேசும் மனப்பான்மை

ஓலை போட்டு மூலைப் பக்கம் கடை போட்டவன்
மூலைப் பக்கம் இடம் கொடுத்தவனை மூலைப் பக்கம் அனுப்ப முயற்சி

Friday, 30 May 2014

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு செய்வார்
ஒற்றுமையற்ற மனம் கொண்டிருப்பார் தன் நிலை வெளியே தெரியா வண்ணம்

தங்களுக்குள் தானே முற்றும் அறிந்தவன்
தங்களோடு இருப்போர் தன்னை விட குறைந்த அறிவு பெற்றவர் என்ற அகம்பாவம்

ஒத்த அறிவு பெற்றோர் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை
அறிவின் அகம்பாவம் அவர்களை ஆட்டி வைக்கின்றது

Wednesday, 30 October 2013

வேற்றுமையில் ஒற்றுமை

உங்கள் விருப்பம் வேறு
என் விருப்பம் வேறு

உங்கள் ரசனை வேறு
என் ரசனை வேறு

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ரசனை
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விருப்பம்

எல்லோரும் ஒரே ரசனை பெற்றிருந்தால்
எல்லோருக்கும் பிரச்சனை

Wednesday, 18 September 2013

நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது


என்று வரும் இந்த ஒற்றுமை
மென்று விழுங்குவது எப்பொழுது இந்த வேறுபாடை

கருத்தொருமித்து கணவன் மனைவியாவதில்லை
கருத்தோடு கருத்து மோதுவதில்லை

கடின மனம் கொண்டோர் கருத்தையும் சண்டைக் களமாக்குகின்றனர்
கொள்கை பிடிப்பு உள்ளோர் மற்றவர் கொள்கையை ஏளனம் செய்கின்றனர்

இன  வெறி பிடித்து மாற்று மார்க்கத்தை பேணுவோரை வெட்டிப் போடுகின்றனர்
இனமான நெறி கொண்டு இயற்கையாய் இருக்க விரும்பாத சதி உள்ளம் கொண்டார்

உடலில் உள்ள உறுப்புகளில் நாக்கு செய்யும் வேலை உயர்வாய் இருக்க வேண்டும்
நல்ல வார்த்தைகள் சொல்லி நயம்பட வாழ வேண்டும்

நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது
நாக்கால் உருவாகி உதிரப் படும் வார்த்தைகள் உடலுக்கே தீங்கை கொடுக்கும்

சொல்லிய வார்த்தைகள் தவறாய் போக தண்டிக்கப் படப் போவது மற்ற அவையங்கள்
நாக்கால் வந்த நாசமான வார்த்தைகள் நாட்டையே உலுக்குகின்றன

ஒற்றுமையின்றி உயர்வில்லை
வேற்றுமை பார்க்கின் சுற்றமில்லை

Monday, 25 March 2013

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்?
பேதமை எம்மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று

சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டு நம்மில் நாமே மோதுண்டோம்.
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்

Saturday, 23 March 2013

ஒலையாக உன்னிடம் தந்துவிட்டேன்!

அண்ணனும் நீயே ஆசிரியரும் நீயே
அண்ணனாக வழிகாட்டினாய்
ஆசிரியராக கற்பித்துக் கொடுத்தாய்
தவறு  செய்தால் தண்டித்தாய்
பிழை இருந்தால் திருத்தினாய்
அன்பை வளர்த்தாய்
ஆர்வத்தை தூண்டினாய்
நண்பனாக நான்கு இடமும் காட்டினாய்
முதல்வனாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்தாய்
இளவலான என்னை ஏவி துணையாக இருக்கச் சொன்னாய்
ஏவியதை இயன்றவரை செய்துத் தந்தேன்

எனக்கொரு இல்லாளை இருவரும் தேடித் தந்தீர்
எனக்கென்று வந்தவள் என் நெஞ்சோடு கலந்தவளை
உனக்கென்று உடையவளுக்கு அது உகந்ததாகவில்லை
நீங்கள் பார்த்து எனக்கு முடித்து வைத்தவள்
நீ முடித்தவளுக்கு  பிடிக்காமல் போனது
நான் முடித்தவள் செய்த குற்றம் என் குற்றமாகாது
குற்றத்திற்கு ஒரு குற்றம் பெருக வேண்டாம்