Wednesday 18 September 2013

நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது


என்று வரும் இந்த ஒற்றுமை
மென்று விழுங்குவது எப்பொழுது இந்த வேறுபாடை

கருத்தொருமித்து கணவன் மனைவியாவதில்லை
கருத்தோடு கருத்து மோதுவதில்லை

கடின மனம் கொண்டோர் கருத்தையும் சண்டைக் களமாக்குகின்றனர்
கொள்கை பிடிப்பு உள்ளோர் மற்றவர் கொள்கையை ஏளனம் செய்கின்றனர்

இன  வெறி பிடித்து மாற்று மார்க்கத்தை பேணுவோரை வெட்டிப் போடுகின்றனர்
இனமான நெறி கொண்டு இயற்கையாய் இருக்க விரும்பாத சதி உள்ளம் கொண்டார்

உடலில் உள்ள உறுப்புகளில் நாக்கு செய்யும் வேலை உயர்வாய் இருக்க வேண்டும்
நல்ல வார்த்தைகள் சொல்லி நயம்பட வாழ வேண்டும்

நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது
நாக்கால் உருவாகி உதிரப் படும் வார்த்தைகள் உடலுக்கே தீங்கை கொடுக்கும்

சொல்லிய வார்த்தைகள் தவறாய் போக தண்டிக்கப் படப் போவது மற்ற அவையங்கள்
நாக்கால் வந்த நாசமான வார்த்தைகள் நாட்டையே உலுக்குகின்றன

ஒற்றுமையின்றி உயர்வில்லை
வேற்றுமை பார்க்கின் சுற்றமில்லை

ஒரு வயிற்றில் உருவாகி வந்தோர் இணைந்து வாழவில்லை
ஒரு நாட்டில் இருப்போர் இணைந்து வாழவில்லை

கற்ற கல்வியும் பெற்ற அறிவும் பிரிவினையை உண்டாகுவதேன்
பிரித்து வாழ நினைத்து  பேதமை படைத்த மனமாவதேன்

புகழும் பணமும் ஆட்சியும் கிடைக்க மக்களை துண்டாடுவதேன்
புகழும் பணமும் ஆட்சியும் நிலைத்து நிற்பதில்லை

கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான்
புத்தியை யெடுத்தவன் அறம் காத்து நிற்ப்பான் 
வேண்டும் வேண்டும் மனித நேயம்

No comments:

Post a Comment