Friday, 30 May 2014

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு

ஒற்றுமை வேண்டுமென ஓயாது சொற்பொழிவு செய்வார்
ஒற்றுமையற்ற மனம் கொண்டிருப்பார் தன் நிலை வெளியே தெரியா வண்ணம்

தங்களுக்குள் தானே முற்றும் அறிந்தவன்
தங்களோடு இருப்போர் தன்னை விட குறைந்த அறிவு பெற்றவர் என்ற அகம்பாவம்

ஒத்த அறிவு பெற்றோர் ஒருபோதும் ஒத்துப் போவதில்லை
அறிவின் அகம்பாவம் அவர்களை ஆட்டி வைக்கின்றது

மற்றவர்கள் பார்வைக்கு அவர்கள் உயர்ந்த ஒற்றுமையுடையோராய் காட்சித் தருவர்
தங்களுக்குள் முடங்கிக் கிடக்கும் ஒற்றுமையற்ற தன்மையை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்

ஒற்றுமையற்ற தன்மையை வெளியில் காட்டிக் கொண்டால்
ஒருவரும் அவர்களை மதியார் என்பதனை அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்

அறிவு பெற்றவருக்குள் போட்டியும் பொறாமையும் மிகைத்து நிற்கும்
மற்றவர் அவர்களில் ஒருவரை தலைவராக நியமித்தாலும்
அடுத்தவர் நேரம் பார்ப்பார் அவரை ஒதுக்கி அந்த இடத்தை தான் அடைய

அதிகமாக கற்றவர் அறிந்து தவறு செய்வார்
செய்த குற்றம் அடுத்தவர் வலையில் சிக்காமல்

சில பெரியார்கள் அறிவாளர்களை தம்முடன் வைத்துக் கொள்வதில்லை
அப் பெரியார்கள் நம்புவது நன் மக்களையே

No comments:

Post a Comment