சுமப்பதில் உயர்வான சுகம்
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு
வாழ்வில்
இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து,
அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில்
இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின்
முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும்
மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை
பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த
தாயை எந்த காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே?
ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத
கொடுமை.