Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts
Thursday, 27 March 2014
என் நினைவில் எப்போதும் என் தாய்
மனதில் ஒரு வலி,
இப்பொழுது எனது தாய் இறைவனிடத்தில்
இன்னும் நான் ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளை ..
காலங்கள் கடந்து விட்டன
நான் சில பிள்ளைகளுக்கு தாய்
தயாகியும் என் தாய் என் இதயத்தில்
நான் என் குழந்தைகளுக்கு கொடுத்த முதல் முத்தம் நினைவிலில்லை
எனக்குத் தெரிந்து என் தாய் எனக்கு கொடுத்த முதல் முத்தம் இன்னும் என் நினைவில்
தாயை நினைத்து மனதில் துடிப்பு
என் இதயத்தில் எப்போதும் என் தாய் நினைப்பு
என் தாயை நான் மறக்க முடியுமா !
என் நினைவில் எப்போதும் என் தாய்
என் தாயை திரும்ப என்னிடம் கொடு இறைவா என்று கேட்பதில்லை
என் தாயை சுவனத்தில் இருக்கச் செய்து நீ என்னை உன்னிடம் அழைக்கும்போது
என் தாயோடு என்னை இருக்கச் செய்து விடு என்று வேண்டாத நாளில்லை
Tuesday, 30 April 2013
ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது.
தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல் வேண்டும் .
அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால் நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில் தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .
Sunday, 7 April 2013
சுமப்பதில் உயர்வான சுகம்
சுமப்பதில் உயர்வான சுகம்
சுமையாக நினைக்காத சுமை
சுமை வளர்வதில் வரவேற்ப்பு
சுமையை சுமையாக நினைக்காத சிறப்பு
சுமைக்கு பாதுகாப்பு கொடுப்பதில் கவனம்
சுமையைச் சுமக்க தன் நலத்திலும் கவனம்
சுமை சுமப்பதில் காலக் கணக்கு
சுமந்த சுமை தானே குறித்த காலத்தில் சுமையைக் குறைத்துவிடும் சிறப்பு
வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

Wednesday, 20 March 2013
முத்தங்கள் பல வகை.
.முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும் மாறுபடும்.
“தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள.
தாயின் முத்தம் பாசத்தை வளர்க்கும்
தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. கட்டியவளிடம் நிகழும் காலத்தையும்
பெற்றோரிடம் கடந்த காலத்தையும்
மனம் மகிழ மனம்விட்டு கதைக்க வேண்டும்
Subscribe to:
Posts (Atom)