Tuesday, 30 April 2013

ஏமாற்றம்!



மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண்.  என் முறைப் பெண்ணுங்கூட.  கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை.  ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன்.  மாதவி அழகி தான்.  கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள்.  நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும்.  மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான்.  ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது.  தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது.  கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன.  எண்ணம்  புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க பூரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.  அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”

சபலம்

மாலை நேரம்…

தங்களை அலங்கரித்துக் கொண்டு அருகே கணவன் வர மழலைச் செல்வங்களுடன் பெருமிதத்தோடு நடந்து சென்ற பெண்களைத் தன் வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்த மாதவி ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.  அவளை அறியாது அவளது கண்கள் பொல பொலவென கண்ணீரைச் சிந்தின.

“ஏம்மா! அழறே”
“ஒண்ணுமில்லேடா கண்ணு!

தான் அழுவதைக் குழந்தை பார்த்துவிட்டதைக் கண்டு புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“அழாதேம்மா… எனக்கும் அழ வருது…” குழந்தையின் கண்கள் கலங்கின.
“இல்லேடா கண்ணு. நான் அழமாட்டேன்”.

குழந்தை தனது அரும்பு விரலை தாயின் கண்ணீரைத் துடைக்க நீட்டியது.

மாதவி குழந்தையை அள்ளி அணைத்து கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

இன்று அவள் முழு உரிமையுடன் தன் குழந்தைக்கு முத்தமிடுகிறாள்.  ஆனால் அவள் கணவன் இருந்தபோது அவர்களுக்குள் அடிக்கடி போட்டி தான்.

“நான் தான் என் கண்ணுக்கு முதலில் முத்தம் கொடுப்பேன்” அது அவள் கணவன்.

“முடியாது நான் தான்…” இது அவள்.

“ம்மாவுக்குத்தான்” என்று குழந்தை முடிவில்லாத போட்டியைத் தீர்த்து வைப்பான்.  அவள் கணவனுக்கு உடனே பொய்க் கோபம் வரும்.  குழந்தையைச் செல்லமாகக் கடிந்து கொள்வான்.  “சும்மா இருங்க! குழந்தை கிட்டே போய் உங்க கோபத்தையெல்லாம் காட்டாதீங்க.”

தாய் தனக்காகப் பரிவதைக் கண்ட குழந்தை அவளோடு ஒட்ழக்கொள்வான்.

“நாளையிலிருந்து உனக்கு பிஸ்கெட் வாங்கி தரமாட்டேன் போ” குழந்தை தனக்குச் சாதகமாக இல்லாததைக் கண்ட அவன் செல்லமாக மிரட்டுவான்.

“ம்மா வாங்கித் தருமே” இது குழந்தை.

“நான் உனக்கு பிஸ்கெட், பொம்மை எல்லாம் வாங்கித் தரேண்டா கண்ணு அப்பா பேச்சு “கா விட்டுடுடா” மாதவி கணவனை அழகு காட்டிக்கொண்டே குழந்தையிடம் கூறுவாள்.

“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணி அவனைக் கெடுத்துடு” அவன் கோபத்தோடு ஆனால் செல்லமாக மாதவியின் கன்னத்தைத் தட்டுவான்.

அந்த நாட்கள்-இனிய நாட்கள் இனி இல்லாத நாட்களாகி விட்டன மாதவிக்கு.

கணவனோடு எப்படியெல்லாம் வாழவேண்டும் என்று கனவு கண்டாள் அவள்? இளமைக் காலத்துக் கனவுகள் அவளது இதயத் திரையில் அடிக்கடி தோன்றி மறையத் தான் செய்தன.  பாழும் சாவு இளமையிலேயே அவளது கணவனைக் கொத்திச் சென்றுவிடும் என்று அவளுக்குத் தான் தெரியுமா?

ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது.


  தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல்  வேண்டும் .
அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை  இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால்  நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில்  தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .

Sunday, 28 April 2013

ஒவ்வொருவரும் பொறுப்பாளியே.

  தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும் அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.

 தலைவராக தேர்ந்தெடுப்பவரை நல்லவராகவும் ,சிந்தனைத் திறன் மிக்கவராகவும்,இறை நம்பிக்கை உள்ளவராகவும்,செயல்பாட்டுத் திறமை மிக்கவராகவும் உள்ளவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
 “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) என்பது  நபி மொழி.

 சேவை மனப்பான்மை – “சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
“அணுவளவு கர்வம் உள்ளவர் சுவனத்தில் நுழைய மாட்டார்”. (முஸ்லிம்)

 தேர்ந்தெடுத்த பின் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நாம்  அவருக்கு துணை நின்று  உற்சாகம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்."

Saturday, 27 April 2013

தனித்து விடப்படதாக நினைக்கும் காலம் மாறிவிட்டது.


இரு நண்பர்களுக்குள் நடந்த அன்பு விசாரிப்புகள் .

‘எப்படி இருக்கிறாய் ! நண்பர்கள் வருகிறார்களா?பொழுது எப்படி போகிறது?

நண்பன் சொல்வார் ‘ஒரு நண்பருமில்லை எல்லாம் பயணம் சென்று விட்டார்கள் , பொழுதே போவது மிகவும் சிரமமாக இருக்கிறது ‘.

‘அதுசரி நீ எப்படி இருக்கிறாய் ‘

நான் நல்லா இருக்கிறேன் .பொழுதும் மகிழ்வாக போகின்றது .நிறைய நண்பர்கள் சேர்ந்துக் கொண்டே இருக்கின்றார்கள் .ஆனால் சில நண்பர்கள் தொல்லை அதிகம். தேவை இல்லாமல் எனது இடத்திற்கு வந்து தொல்லை தருவதோடு வம்பும் செய்கின்றார்கள், அது மட்டுமில்லாமல் நான் ஏதாவது சொன்னால் அவர்கள் எனது மனது வேதனைப் படும்படி சொல்லி விடுகின்றனர்.அதுதான் மிகவும் சிரமமாக இருக்கின்றது . நமக்கு ஒத்து வராத நண்பர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு படாத பாடு படுகிறேன்’

பெண்களின் திருமண வாழ்வின் முக்கியத்துவம்

விதவையான மங்கைக்கு மறுமணம்

மனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.

விதவைகளுக்கு மறுவாழ்வு
புரட்சி“மறுமணம்”
கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா. மிகக் கொடிய தென்று பட்டதண்ணே. குளிர்கின்ற வட்டநிலா”
புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.

‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.
வாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ!’
இது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும்.

இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்

எத்தனை வகை குழைவுகள்!

 பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . தேவைக்கு மேல் சேர்த்து வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவிதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. காரியம் நடக்க  எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் காண்கின்றோம்


 நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது .அமெரிக்கர்கள் வெள்ளை நிறம் ஆனால் குறுகிய மனது. அடுத்தவர் நாட்டையே அடிமையாக்க நினைக்கும் பேராசை