Monday, 27 October 2014

நிறைவேறாத காதலாக இருப்பினும்..!

காதல் அனுபவம்

உன்னை ஒருவள் காதலிக்கிறாள்
உனக்கும் அவளிடம் காதல் உண்டு

அவள் காதலை மறைமுகமாக உன்னிடம் தெரிவித்து விட்டாள்
அவள் காதலை தெரிந்தும் அதனை விரும்பியும் அதனை நீ காட்டிக் கொள்ளவில்லை

காலம் கடந்தது
நீயும் பெற்றோர் உனக்கு திருமணம் செய்விக்க விரும்பியவளை திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வை மகிழ்வாய் கடத்துகிறாய்
அவள் நிலையும் அவ்விதே இருக்கும் !

நிறைவோடு அவள் உன் வாழ்வெல்லாம் வந்து காட்சி அளிக்கிறாள்
நிறைவேறாத காதலாக இருப்பினும்
நிலையாக மனதில் நிற்பவளாக அவள் உன் மனதில்
அழியாத கோலங்கள்
இதுதான்
இச்சைக்கு முக்கியம் தராத
உண்மையான காதல்

Mohamed Ali

எனக்கு பிடித்த ஒரு சொல்

எனக்கு பிடித்த ஒரு சொல்
உனக்கும் பிடித்திருக்குமென்று
எனக்கு பிடித்த உன்னிடம் சொல்ல
உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி விடு
உனக்கு பிடிக்கவில்லையென்பதற்காக
ஓலமிட்டு ஊரை கூட்டுகின்றாய்
கூடிய மக்கள் அச்சொல்லின் உயர்வை அறியாரோ!

பொருத்தமான சொல்லை
பொருந்தியவளிடம்
பொருத்தமாக சொல்வதில் பெருமகிழ்வு
பொருளற்ற பல்லாயிரம் சொற்களை விட
பொருத்தமான காதலிக்கிறேன் என்ற சொல்
மேலானதாய் மனதில் பட்டது

காதலிப்பது தவறா
காதலை சொல்வதை தவறா
காதல் என்ற சொல்லே தவறா
ஊரைக் கூட்டி ஓலம் போடாதே

காதல் ஒன்று இல்லையனில்
உலகமே ஒன்றுமில்லாமல் போய்விடும்
 

Saturday, 25 October 2014

நெஞ்சமெல்லாம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்வில் உயர்வைத் தர உதவுகின்றன


(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -

திருக்குர்ஆன்: 2:187

"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

-திருக்குர்ஆன் 21:30
*********************************************************************

Thursday, 23 October 2014

அறிய வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் வேண்டும்

விரும்பியது கிடைத்தது
விரும்பியது தேடியும் கிடைத்தது
விரும்பியது தேடாமலும் கிடைத்தது
விரும்பியது கிடைத்ததால் வாழ்வு மகிழ்வானது

வாழ்வில் நிறைவு பெற்றதால்
வாழ்வை தொடர விரும்பவில்லையென்று
யாரும் நிறைவாக சொல்வதில்லை

Monday, 22 September 2014

எது குறைந்தாலும் எனக்கு உறக்கம் வராது

 
 
நான் நடுவில் படுத்துக் கொள்வேன்
எனக்கு இரு பக்கமும் இரண்டு பாசமானவர்கள்
நான் இவர்கள் என்னோடு உறங்குவதால் மகிழ்வடைகின்றேன்
எனக்கு இவர்கள் தரும் உணர்வுகள் நிறைவைத் தருகின்றன

ஒருத்தி இங்கும் அங்கும் அசைந்தாலும்
ஒருவர் ரீங்கார குறட்டை விட்டாலும்
அவர்கள் இருவரும் என்னை அணைத்து உறங்குவர்
இவைகள் எனக்கு பழகிப் போனது
இவைகளில் எது குறைந்தாலும்
எனக்கு உறக்கம் வராது

குழந்தையான மகளையும்
ஒன்றிவிட்ட கணவனையும்
ஒதுக்கி விட்டு என்னால் எப்படி உறங்க முடியும் !

ஸ்டேடஸ் போட வேண்டும்

நான் நிறைய பயணங்கள் செய்திருக்கின்றேன்
நான் பார்த்தவைகள் அதிகம்
நான் பார்த்ததிலிருந்து கற்றது குறைவு
குறைவை நிறைவு செய்ய முடியாது
குறைகளை நிறைவாக்க முயலலாம்
குறைவான நம்பிக்கை இல்லை
என்னை நானே சரி செய்துக் கொள்ள முயல வேண்டும்

பாணி பூரி


பள்ளிக்கூட வாசலில் பாணி பூரி விற்பவன்
பள்ளிச் சிறார்களுக்கு அதனை வாங்க நயமான வாரத்தைகள் சொல்லி அழைக்கின்றான்
செல்வந்தர் வீட்டு சிறார்கள் அதனை வாங்கி ஆசையோடு சாப்பிடுகிறார்கள்
அந்தக் கூட்டத்தில் கிழிந்த ஆடையோடு ஒரு பையன் பாணி பூரி வாங்க பணமின்றி மற்றவர்கள் சாப்பிடுவதையே பார்த்து நிற்கின்றான்
அவனது கண்களில் பான்பூரியை வாங்கி சாப்பிட முடியாத சோகம்
அவனுக்கு பசியால் அமிலங்கள் சுரக்க சிறிய வயிற்று வலி வருகின்றது
வலியை தாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல்கின்றான்

பாணி பூரியை வாங்கி சாப்பிட்ட செல்வந்தர் வீட்டு சிறார்களுக்கு
வீடு சென்ற பின் ஒவ்வாமையால் ,செரிமானம் வராமையால் வயிற்று வலி அதிகமாகின்றது
அவர்களை அழைத்துக் கொண்டு அக் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவரிடம் ஓடுகின்றார்கள்