Sunday 22 December 2013

விருப்பமும்(லைக்கும்) கருத்துரையும்


லைக் (விருப்பம் )ஒரு உந்து சக்தி

லைக் கொடுப்பது விருப்பத்தின் அறிகுறி
லைக் மனிதருக்கு மனிதர் வேறுபடும்
லைக் இருந்தும் காட்டிக் கொள்ளாமல் இருப்பது அடக்கம்
லைக் கொடுத்து மாற்றுக் கருத்து வர விரும்பாமல் இருக்கலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி மனதளவில் வந்து மகிழலாம்
லைக் கொடுத்தவர்க்கு நன்றி சொல்ல விடுபட்டதால் லைக் கொடுத்தவர் மனது வருந்தலாம்
லைக் போட்டுத் தான் ஆக வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது முறையல்ல
லைக் ஆகும்படி எழுதுவது சிலருக்கு கை வந்த கலை
லைக் கொடுப்பது தெரிந்தவருக்கு மட்டும் கொடுக்கப் படலாம்
லைக் ஆக எழுதியதாக தானே நினைத்து மகிழலாம்
லைக் செய்தால் தான் நண்பன் எனபது நட்பின் அடையாளம் ,நண்பன் செய்வதெல்லாம் லைக் ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை
லைக் ஒரு தலைக் காதல் போன்றும் இருக்கலாம்
லைக் தனிப்பட்ட ரசனையைப் பொருத்தது
லைக் செய்யாவிட்டாலும் செய்வதனை செய்து லைக் ஆகும் வழியை முயற்சிக்கலாம்
லைக்காண வாழ்க்கை கிடைப்பது கடினம்
லைக்காண வாழ்க்கை கிடைக்க இறைவழி வாழ வேண்டும்
லைக்கான வாழ்க்கை நிரந்தர வாழ்க்கை சுவனத்தில்தான் கிடைக்கும் 


கருத்துரை வழங்கல்

கருத்தை தெரிவிக்கும் உரை கருத்துரையானது
காவியத்திற்கு கருத்துரை
கட்டுரைக்கு கருத்துரை
கவிதைக்கு கருத்துரை
படித்ததற்கு
பார்த்ததற்கு
கருத்துரை வழங்க
அவற்றின் ஞானம் வேண்டும்
அதில் நேர்மை இருத்தல் வேண்டும்
அது ஒரு பக்க சார்புடையதாக இல்லாமல் இருத்தல் வேண்டும்

மூலத்தை விட கருத்துரை சிறப்பாக இருக்கவும் செய்யும்
கவிதை புரியாமல் போகலாம்
கவிதையின் விளக்க உரை
கவிதையை அறிய வைக்கும்
சங்க கால பாடல்கள் பாட நூல்கலாயின
அதனை விளங்க வைக்க ஆசிரியர் தேவைப் பட்டார்
இக்கால புதுக்கவிதை மக்களுக்கு எளிமையாக புரிய வைத்தன
புதுக்கவிதை படங்களில் வர மக்கள் அதனை பாட ஆரம்பித்தனர்
மக்கள் மனதில் பதிய வைத்தன
புதுக் கவிதைகள் மனதில் உள் வாங்கப் பட பழைய யாப்புக் கவிதைகளும் திரும்பவும் அரங்கேறின
தமிழுக்கு புதுக்கவிதையும் சங்க கால பாடல்களின் பாடல்களின் வித்தாக வந்து சேர்ந்தன

அவைகளுக்கு கருத்துரை வழங்குவதில் மக்கள் ஆர்வம் காட்ட தமிழுக்கு மறுமலர்ச்சியானது

" இது சிறந்த கவிதை என்று எளிமையாகச் சொல்லி விடுவது போல எது சிறந்த கவிதை எனச் சொல்ல முடியாது " என்கிறார் பேராசிரியர் வையாபுரிபிள்ளை.

அதுபோல் கருத்துரையும் பல் வகைகளிலும் சிறப்புப் பெற்றது.
அதில் எது சிறந்தது என்ற நிலை உருவானது .
பட்டிமன்றங்கள் கருத்துரையை வளர்க்கச் செய்தன.
கருத்துகள் குவியட்டும்
அறிவு வளரட்டும்
ஞானம் பெருகட்டும்

No comments:

Post a Comment