Tuesday 10 December 2013

பிறப்பும் இறப்பும்

சரியான உப்புக் கலவை
சரியான காரக் கலவை
சரியான உணவு
சரியான காலத்தில் திருமணம்
சரியான காலத்தில் குழந்தை
சரியான வளர்ச்சி குழந்தை
சரியான அறிவுக் குழந்தை

சரியான குழந்தையின் கேள்வி 'யார் இறைவன்!'
சரியான புரிதல் இறைவனைப் பற்றி
சரியான புரிதலால் இறைவனை தொழுதல்
சரியான ஒளு(தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல்)
சரியான தொழுதல்


திடீரென வாந்தி குழந்தைக்கு
திடீரென இறப்பு இறைவனை நாடி
திடீரென இறப்பு செய்தி அதிர்ச்சி அனைவருக்கும்
திடீரென நிகழ்வாக நமக்கு
திட்டமிட்ட நிகழ்வு இறைவனால்

இறைவன் கொடுப்பான் எடுப்பான்
இறைவன் கொடுப்பதும் எடுப்பதும் அவன் உரிமை
இறைவன் கொடுத்த உயிரை எடுக்க நமக்கு உரிமையில்லை
இறைவன் கொடுத்ததை எடுத்ததால் வருந்துவதில் பயனுமில்லை

மரணம் வாழ்கையின் உண்மை
உண்மை உயர்வடைய இறைநேசம் தேவை
இறைநேசம் இறைவனை தொழவைக்கும்
இறைநேசம் வளர அவன் படைப்பை நேசிக்க வைக்கும்
நேசிப்பதால் சேவை செய்ய வைக்கும்
சேவை செய்தலால் நன்மை சேரச் செய்யும்
நன்மை சேர்தலால் மரண பயம் நீங்கும்

 "நீ மாலை நேரத்தை அடைந்து விட்டால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலைவேளையை அடைந்துவிட்டால் மாலை நேரத்தை எதிர்பாக்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

 நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், பாகம் - 5  ஹதீஸ் - 6416.

“(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே!” (அல் குர்ஆன் 55:26)
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறும் போது, “நிச்சயமாக நீரும் மரிப்பவர்! நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே!” (அல்குர்ஆன் 39:30)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஐந்து நிலைமைகளட ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய்வருமுன் ஆரோக்கியத்தையும், வேலை வருமுன் ஓய்வையும், வயோகிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக்கொள்’ ஆதாரம் : அஹ்மத்.

மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்துவிட்டால் அதை தடுக்கவோ அல்லது அதை பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது. அல்லாஹ் கூறுகிறான்: “ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்” (அல் குர்ஆன் 7:34)

1 comment:

  1. அருமை... உண்மையும் கூட...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete