Tuesday 23 December 2014

இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

ஒவ்வொரு நாளும் உயர்வு
ஒவ்வொரு மாதமும் உயர்வு

நாளை நடக்கப் போவதை நாம் அறியோம்
நாம் இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

இருக்கும் நாளெல்லாம் உயர்வு
இருக்கும் காலங்கள் முழுமை பெற சேவை தேவை
கிடைக்கும் நாளையெல்லாம் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்
ஹஜ் மாதம் வந்தால் ஹஜ் புனித யாத்திரைப் பற்றி அதிகமாக நினைக்கப் படும்
ரமலான் மாதம் வர ரமலான் சிந்தனைதான்

தினமும் இறைவன் சிந்தனைதான்
தினமும் இறைவனை சிந்திக்க குர்ஆனை ஓதுவதும்
தினமும் இறைவனால் இறுதியாக அனுப்பப்பட்ட
இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினையாமல் இருப்பதில்லை

ரபீஉல் அவ்வல் மாதத்தில் அதிகமாக
இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி
(ஹதீஸ்கள் ,வரலாறு , வாழ்வின் நிகழ்வுகள் மற்றும் நாம் அதனை பின்பற்ற வேண்டிய அவசியங்கள்)
மக்களிடத்தில் அதிகமாக விளக்க உரை நிகழ்துகின்றோம்

இறைத் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்ததும்
மரணமடைந்ததும் ரபீஉல் அவ்வல் மாதத்தில் தான்

No comments:

Post a Comment