மயிலாடுதுறையில் உள்ள எங்கள் கடையில் வைத்தியநாதன் நம்பிக்கையான ஒரு கணக்காளர்.
தனது வாழ்நாள் முழுதும் சேவை செய்தார்.
தனது பிள்ளைகள் சம்பாரிக்க ஆரம்பித்தும் தனது குடும்பத்தார் தடுத்தும் வாழ்நாள் இறுதி வரை கடைக்கு வந்து பணிகளை செய்வதில் பிடிவாதமாக இருந்தார் .
அவருக்கு ஆறு பெண்கள் ஒரு பையன் .அனைவரையும் சிறப்பாக மேற்படிப்பு வரை படிக்க வைத்து அவர்கள் வேலை செய்து ஈட்டிய பணத்தின் சேமிப்பைக் கொண்டு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.
ஒரே பையனை ஒரு விஞ்ஞானியாக்கினார்.
அவர் கலாம் பணியில் இருக்கும்போது தானும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஹரிஹோட்டாவில் மற்றும் திருவனந்தபுரத்திலும் வேலை.இப்பொழுதும் அங்கேயே விஞ்ஞானியாக இருக்கிறார்.
தனது மகனுக்கு மட்டும் திருமணம் நடக்கு முன் அதிகாலை நேரத்தில் கணக்காளர் வைத்தியநாதன் எங்கள் கடை சம்பந்தமாக ஓர் இடத்திற்கு புறப்படுமுன் அவரது வீட்டில் இதய அடைப்பு வந்ததால் இறந்தார் .
அவர் ஒரு சிறந்த பண்பாளர் தி.க .கொள்கை கொண்டவர்.
அவர் இறப்புக்கு அவர் வீட்டுக்கு நான் சென்றபோது வாசலில் மாட்டப் பட்டிருந்த பலகையில் எழுதப் பட்டிருந்த நான் கண்ட வரிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது
"நான் இறந்து விட்டால் வட்டிக்கு கடன் வாங்கி எனது சடலத்தை எரிக்கக்கூடாது.அதைவிட எனது சடலத்தை நகராட்சியில் ஒப்படைத்து விடுங்கள்" என்பதாகும்.
No comments:
Post a Comment