வசதிகள் இல்லை
குறைவுகள் இல்லை
வசதியானவர்களைப் பார்த்து
வசதிகள் வேண்டுமென்று வாடினேன்
வசதிகள் கிடைக்க
வேண்டியதை செய்தேன்
வசதிகள் கிடைத்தது
வேண்டியவைகள் கிடைத்தன
வேண்டியவைகள் கிடைத்தது
வேண்டியது கிடைத்தும் மன நிறைவு இல்லை
நிறைவோடு கிடைக்கும் வாழ்வே
நிம்மதியான (பரக்கத்தை-அருள் வளம்) வாழ்வைத் தரும்
செய்யும் வேலை
இருக்கும் இடம்
உயர்வாக இருக்கலாம்
செய்யும் வேலையில்
இருக்கும் இடத்தில்
இயல்பான பிடிப்பு இல்லையெனில்
இருந்தும் இல்லாத (பரக்கத்-அருள் வளம்) நிலைதான்
படைத்தவனின் அருளின்றி
படைக்கப்பட்டது கிடைத்தாலும்
இல்லாத (பரக்கத்-அருள் வளம்) நிலைதான்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!"
என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி (2079)
No comments:
Post a Comment