Friday 3 April 2015

இறப்பின் காலம் யார் அறிவார் !

இறப்பு எப்பொழுது வரும்
இறக்கும் நேரம் அறிந்திருந்தால்
இறக்கும் நேரத்திலேயாவது நல்லவராக் மாறி விடுவார்
மனிதனை கொலை செய்பவன் இதற்கு விதி விலக்கு
இறப்பின் நுனிக்கு வருபவர்
இறைவா என்னை காப்பாற்று இனி நல்லவன் ஆவேன் என்பர் சிலர்
இறைவன் அருளால் உடல்நலம் பெற்றால் இறைவனுக்கு கொடுத்த வாக்கை மறப்பார்
புகை பிடிக்கும் பழக்கத்தால் அவதிப்டுவோர்
அவதிபடும் நிலையில் இனி புகை பிடிப்பதில்லை என்ற முடிவுக்கு வருவார்
உடல் நலம் திருபப் பெற திரும்பவும் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவார்
இறப்பின் நிலைக்கு தள்ளப்படுதலும்
வியாதியால் அவதிப்படுவதும்
வேதனையான நிலையாக இருந்தாலும்
அது மனித மனதில் சிலருக்கு நிச்சயமாக ஒரு மாற்றத்தையே தரும்
இறப்பின் காலம் அறியாவிட்டாலும்
வியாதியும் ,வேதனையும் மனிதனை நல்லவர்களாக உருவாக்கும் சக்தியைத் தரக் கூடியதுதான்
வாழ்வில் நல்லதை மட்டும் வேண்டுமென்றாலும் அது முடியாத ஒன்று
சிலர் அவைகளை காட்டிக் கொள்வர்
மற்றவர் அவைகளை மறைத்து ,மறந்து வாழ்வர்
வியாதியடைய இறை நினைவு வரத்தான் செய்யும்
அந்நிலையில் பாவ மன்னிப்பு தேடவே முயல்வர்
அவர்கள் சிறப்படைவர்

No comments:

Post a Comment