Showing posts with label இன்பம். Show all posts
Showing posts with label இன்பம். Show all posts

Saturday, 29 November 2014

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Monday, 15 July 2013

உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும்.


செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை. 

" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(குர்ஆன் 7:144)

கவலை ,துயரம் இல்லாதவர் யார் !

துன்பம் வர துயலாதே !
துன்பத்தையும் நன்மையாக்கும் ஆற்றல் உன் மனதில் உள்ளது .
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும். துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் .
நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! .
நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ? நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது.

Saturday, 29 June 2013

காலமெல்லாம் கவலை !


பணமில்லையே என்ற கவலை வந்தது

பணம் கிடைத்தும் அதை அனுபவிக்க உடல் நலமில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆக வில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆன பின் நாம் நினைத்தபடி மனைவி அமையவில்லையே என்ற கவலை வந்தது

திருமணம் ஆகிய பின் குழந்தை பெரும் பாகியமில்லையே என்ற கவலை வந்தது

குழந்தைகள் பெற்றும் நாம் நினைத்தபடி குழந்தைகள் படிக்கவில்லையே என்ற கவலை வந்தது

வளர்த்த செடி சிறப்பாய் வளர பாதுகாப்போடு கவணிப்போம்
மனம் மணமாய் மகிழ்ந்து மனம் வீச இறையருள் இதயத்தில் இருக்க நினைப்பதில்லை
துன்பம் வர துவளுகிறோம் .மகிழ்வு வர துள்ளுகிறோம்
இன்பத்தையும் துன்பத்தையும் சமநிலை கொண்டு மனதை சமப்படுத்திக் கொள்வதில்லை

சிறிய கவலை பெரிய கவலை வந்து மறையும் இது நியதி
மறதி என்று ஒன்றில்லையெனில் மனோவியாதி வந்து மடிவோம்

அத்தனைக்கும் மருந்து இறைவனைத் தொழுது தொடர் வேலையில் தொடர்வதே சிறப்பாக்கி வைக்கும்.

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.-- குர்ஆன்  94:5

Saturday, 6 April 2013

விரும்பாததின் மேல் விருப்பப்படு!

 துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும்.  துன்பம்  துவள  இறைவனை  அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் 

  நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்க்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! . நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ?  நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது, எந்த காரியமும் ஒரு நன்மைக்காகவே  இருக்கும் என்பதனை நம்பாதவனுக்கு காலம் முழுதும் கவலைதான்

  நினைத்ததெல்லாம் கிடைத்துவிட்டால் மகிழ்வில்லை .வாடைக்குப்பின் தென்றல்  வரும் .தென்றல் முடிய கோடை வரும் . தென்றல் மட்டும் இருந்தால் கோடைகாலத்தில் கிடைக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும் . நல்ல கொடையில்தான் நிலங்கள் பாலமாக வெடித்து பயிர் வளர வழி வகுக்கும் . பின்பு மழை வந்தால் செடிகள் தழைக்கும் .

 காலமே மாறி, மாறி வரும் நிலையினை நாம் விரும்பும் போது மனதில் மட்டும் மகிழ்வு மட்டும் குடி இருக்க வேண்டும்
என்ற பேராசை ஏன்? நிழலின்  அருமையை  வெயிலுக்குப் பின் அறியமுடிகின்றது . வாழ்வின் நிலையும் அதுதான் .துன்பம் வந்து மறையும்  போதுதான் மகிழ்வினை  முழுமையாக அறிய முடியும் இருளுக்குப் பின் ஒளி உண்டு.
ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது-குர்ஆன் .94:5.

. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. குர்ஆன்: 94:6

 எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.குர்ஆன் 94:7.
மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.
-குர்ஆன் 94:8.