Monday 15 July 2013

உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும்.


செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை. 

" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(குர்ஆன் 7:144)


நபிமார்களும் அவர்கள் செய்த தொழிலும்

நபி ஆதம்(அலை) அவர்கள் - விவசாயம்

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள்- விவசாயம்

நபி லூத்(அலை) அவர்கள்  - விவசாயம்

நபி யஸஃ (அலை) அவர்கள்  - விவசாயம்

நபி ஸாலிஹ் (அலை) அவர்கள்- வியாபாரம்

நபி ஹாரூன்(அலை)அவர்கள் - வியாபாரம்

நபி நூஹ்(அலை) அவர்கள்- தச்சுத் தொழில்

நபி ஜக்கரிய்யா(அலை) அவர்கள் -தச்சுத் தொழில்

நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் - வேட்டையாடுதல்

நபி யஃகூப்(அலை) அவர்கள்-ஆடு மேய்த்தல்

நபி ஷுஐப்(அலை) அவர்கள் - ஆடு மேய்த்தல்

நபி மூசா(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல

நபி லுக்மான்(அலை) அவர்கள் -  ஆடு மேய்த்தல்

நபி (ஸல்) அவர்கள்-  ஆடு மேய்த்தல்

உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்  (குர்ஆன் 43. 32)

வறுமை உன்னை வாட்டுக்கின்றதா   அதனால்  வேதனை உன்னை   துவள வைக்கின்றதா வருந்தாதே . நல்ல வழியில் முயற்சி செய். சோர்வு உன்னை முடக்கிவிடும். இறைவனை நம்பு உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும். உன்னைப்போல் அநேகர் உனக்கும் கீழ் பலர் .  அதனை நினைவு கொள் உனக்கு கிடைத்த காலத்தை பயன்படுத்திக்கொள். முழு கவனமும் அதில் இருக்க வேண்டும் ஆனால் ஒரு போதும் கவலை வர கூடாது. இறைவன் நமக்கு தாங்கும் அளவுக்குத்தான் சிரமம் தருவான். ஒரு போதும் அது நிலையாக இருந்து விடாது. துன்பத்திற்குப் பின் நிச்சயம் மகிழ்வு உண்டு.

 “நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.” (Chapter 94, Verse 6)

2 comments:

  1. உணர வேண்டிய கருத்துக்கள்... தொடர்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. God never grades people on the basis rich or poor. Every human gets what he sows.

    ReplyDelete