Showing posts with label இறப்பு. Show all posts
Showing posts with label இறப்பு. Show all posts

Friday, 3 April 2015

இறப்பின் காலம் யார் அறிவார் !

இறப்பு எப்பொழுது வரும்
இறக்கும் நேரம் அறிந்திருந்தால்
இறக்கும் நேரத்திலேயாவது நல்லவராக் மாறி விடுவார்
மனிதனை கொலை செய்பவன் இதற்கு விதி விலக்கு
இறப்பின் நுனிக்கு வருபவர்
இறைவா என்னை காப்பாற்று இனி நல்லவன் ஆவேன் என்பர் சிலர்
இறைவன் அருளால் உடல்நலம் பெற்றால் இறைவனுக்கு கொடுத்த வாக்கை மறப்பார்

Thursday, 1 May 2014

வேதனையற்ற மனம்

இறப்பு நிகழ்ந்தது
வந்தவர் விசாரித்தனர்
வந்ததற்கு அழுதும் சென்றனர்
இழந்தவர் அமைதி காத்தார்
இழந்தவர் விழிகளில் கண்ணீர் வரவில்லை
வந்தவர் இழந்தவர் முகத்தில் வாட்டம் காணாததைக் கண்டு வியந்தனர்
இழந்தவர் முகத்தில் வாட்டம் வராத காரணம் அவரே அறிவார்
இறந்தவர் இருக்கும் போது இழந்தவரை நோகச் செய்தபோது
இழந்தவர் வருந்தி விட்ட கண்ணீர் அளவற்றது
இழந்தவர் இறப்பை நினைத்து வருந்தவில்லை
இழந்தவர் கண்களில் நீர் வற்றிப்போனதால்
இழந்ததை வருந்தி வடிக்க விழிகளில் நீர் இல்லை

by-Mohamed Ali

Sunday, 27 April 2014

யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்!

யாரும் விரும்பாத நீ
யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்

பிறக்கும்போதே ஒட்டிக்கொண்டு பிறந்து விட்டாய்
இருப்பவரையும் சொல்லிக் கொள்ளாமல் அழைத்து விடுகிறாய்

அழைக்காத விருந்தினன்
விரும்பாத உறவினன்
வருகையை நேசிக்கவில்லை
வருகையை தடுக்க முடியவில்லை
வருகையை விரும்பவில்லையென்றாலும்
விரும்பியதுபோது அழைத்துக் கொள்வாய்

Tuesday, 10 December 2013

பிறப்பும் இறப்பும்

சரியான உப்புக் கலவை
சரியான காரக் கலவை
சரியான உணவு
சரியான காலத்தில் திருமணம்
சரியான காலத்தில் குழந்தை
சரியான வளர்ச்சி குழந்தை
சரியான அறிவுக் குழந்தை

சரியான குழந்தையின் கேள்வி 'யார் இறைவன்!'
சரியான புரிதல் இறைவனைப் பற்றி
சரியான புரிதலால் இறைவனை தொழுதல்
சரியான ஒளு(தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு ஒருவர் தூய்மையான நிலையில் இருத்தல்)
சரியான தொழுதல்

Thursday, 12 September 2013

ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.

Friday, 17 May 2013

உன்னுடன் வருவது யார் ?

பிறப்பு உறுதி இல்லை. இறப்பு உறுதி. இறப்பு இறுதியாவதுமில்லை

இறப்புதான் பிறப்பின் தொடக்கம். வாழ்ந்த வாழ்வின் பதிவேட்டுகளின்  பிரதிபலிப்பு இடமாற்றமான புதிய இடத்தின் பிறப்பில் உரிய பலனைத் தரும்.

மரணம் என்று ஒன்று உண்டு என நாம் அறிந்தும் அதனை மறந்து செயல்படுகின்றோம்.

மரணம் வரும்போது மரணத்தின் பயம் வருகின்றது .அது இந்த அனுபவித்த வாழ்வு நம்மை விட்டு அகலுகின்றதே என்பதனால். மரணம் ஒரு முடிவாகி விடாமல் அது  புதிய இடத்தில்  பிறந்து பயணம் தொடர்கின்றது என்ற நம்பிக்கை வருவதில்லை.அந்த நம்பிக்கை வரும்போது கிடைத்த இந்த வாழ்வை பிறக்கப் போகும் இடத்திற்கு தகுந்தது போல் இந்த வாழ்வை முறைப் படுத்திக் கொள்வோம். இதுவே இறுதியென்று நினைக்க மாட்டோம் .

   இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான் இறுதி என்று நாம் எண்ணுகின்றோம். இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால் மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும் இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .

மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு. 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

 உன்னுடன் வருவது யார் ?


மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள். 

    1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்