Friday 18 July 2014

முக்காடிட்ட பெண்களெல்லாம் முடங்கிக் கிடப்பதில்லை


முக்காடிட்ட பெண்களெல்லாம் முடங்கிக் கிடப்பதில்லை
முக்காடிட்ட பெண்களெல்லாம் அடிமையாகவுமில்லை
முக்காடை அணிந்து பெண்கள் செல்வது
ஒரு தொடர்வழி கலாசாரத்தின் நாகரீகம்

காக்கை கருப்பென்றால்
கருப்பெல்லாம் காக்கையாகுமா
காக்கையில் கருப்பும் உண்டு
காக்கையில் வெள்ளையும் உண்டு
காம்பியாவில் வெள்ளை காக்கைகளைத்தான் பார்க்க முடியும்
காம்பியாவில் வாழும் மக்கள் கருப்பு நிறத்தவர்
(நேரில் பார்த்தது )

வெள்ளை நிறத்தோன் உயர்ந்தவரும் அல்ல
கருப்பு நிறத்தோன் தாழ்ந்தவரும் அல்ல
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"
\\

முக்காடு போடாத ஆண்கள் அடிமையாக பல நாடுகளில் வாழ்கிறார்கள்
முக்காடிட்ட பெண்களுக்கும்
முக்காடு போடாத பெண்களுக்கும்
முக்காடு போடாத ஆண்கள் அடிமையாக இருக்கிறார்கள்
அது பாசத்தலோ அல்லது அச்சத்தினாலோ
அடிமை வாழ்வு ஆடையில் இல்லை
அடிமை வாழ்வு வாழும் முறையில் உள்ளது
கல்வி கற்றவர்களும் பதவி ஆசையால்
அடிமையாய் அடங்கிப் போவதுண்டு
மனிதருக்கு காலில் விழுந்து சரணடைந்து விடுவதும் உண்டு


பல கோடி மக்களை கொண்ட சமுதாயத்தில் பாதி பகுதி
கற்காமல் போனால் அந்நாடு முன்னேற்றம் காண்பது கடினம்
கற்காதவர்கள் பெண்களாய் இருந்தாலும்
இக்காலத்தில் பெண்களே சிறப்பாக கற்கின்றார்கள்
முக்காடிட்டு வேலைக்கும் செல்கின்றார்கள்
Mohamed Ali

No comments:

Post a Comment