Tuesday 8 July 2014

மனது புதுமைகளை தந்துக் கொண்டே இருக்கும்

கடலில் உயிர் வாழ்பவை பல் வகை
கடலில் உயிர் போக்கியவை பல் வகை

மனதில் உதித்தவை பல் வகை
மனதோடு அழிந்தவை பல் வகை

கடலில் இருப்பதும் வாழ விரும்புகின்றது
மனத்தில் இருப்பதும் சொல்ல விரும்புகின்றது

கடலில் அழிந்தவை பயனற்றுப் போனது
மனதில் உதித்தவை பயன்படுத்தாமல் பயனற்றுப் போனது

கடல் அலையும் தொடரும்
கடல் நீரும் வற்றாது

மனதின் நினைவுகள் தொடரும்
மனதின் கற்பனைகள் வளரும்

சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் மனிதன்
சிந்தித்த கருத்தை செயல் படுத்த விரும்புபவன் வீரன்

ஒன்றையே நினைத்து நிற்பவன் அடுத்த அடி வைக்க தயங்குவான்
பலவற்றை சிந்திப்பவன் ஒன்றில்லாவிட்டாலும் அடுத்த அடியை உய்ர்வாக்குவான்

சிரிப்பு ,கவலை ,அழுகை ,மகிழ்வு .பிறப்பு .இறப்பு இப்படி ஒரு கூட்டு மனிதனிடத்தில்
மனதின் சித்தனையிலும் அத்தனையும் உட் கொண்டதே

ஒற்றை கல்வி ஒன்றுக்கும் உதவாது
ஒற்றை வடிவம் விருப்பத்தைக் குறைக்கும்
பல வகையில் கொடு
பல வகையாக படி
பல முறையில் எழுது
கவிதையாகவோ
கட்டுரையாகவோ
நாடகமாகவோ
இப்படி பலவகை எழுத முயல
மனதில் தோன்றும் கற்பனைகளை ,நிகழ்வுகளை எழுத
வாழ்வில் விடி வெள்ளியாய் வெளிச்சம் தந்து
மனது புதுமைகளை தந்துக் கொண்டே இருக்கும்
வாழ்வில் பிடிப்பு இருக்கும்

இன்னும் எழுதிக் கொண்டே இருப்பேன்
எவர் படிக்கிறார் என்ற ஆதங்கம் வேண்டாம்

மூளையின் செல்கள் முடங்கி விடாமல் இருக்க எழுதிக் கொண்டே இரு
தூண்டப் படும் செல்கள் பன்மடங்காகப் பெருகும்
#மனது

No comments:

Post a Comment