Sunday, 8 April 2018

ஸல்லல்லாஹ் பாவா


சல்லல்லா பாவாவும்(தலையில் பேட்டா) மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்களும் தலையில் வெள்ளை தொப்பி )
***********************
ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது
அவர்கள் உண்டியில் சேர்ந்த பணத்தை வைத்து சீர்காழி அருகில் உள்ள புத்தூரில் பள்ளிவாசல் கட்டி உள்ளார்கள்
அனைவரிடத்திலும் மிகவும் பாசம் அதிகம் ஆனால் தவறைக் காண கண்டிப்பாக இருப்பார்கள்

அவர்கள் எங்கள் தந்தை மீது தனிப்பாசம் உண்டு
எங்கள் தந்தை கொள்ளிடம் அருகில் உள்ள துளசேந்திர கிராமத்தை வாங்கி அங்கு ஒரு பள்ளிவாசலை அவர்கள் ஆரம்பமாக கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் (காதரியா பள்ளிவாசலை )கட்டி வக்ப் செய்தார்கள்
எங்கள் தந்தை S.E.அப்துல் காதர் சாஹிப் அவர்கள் இறைவன் வசம் சேர்ந்ததனை கேள்விபட்டு நீடூர்-நெய்வாசல் வந்தவர்கள் அதோடு நோய்வாய்ப்பட்டு ஒரு மாதத்தில் நீடூர்-நெய்வாசலில் பள்ளிவாசலில் வைத்து அல்லாஹ் அவர்களை அழைத்துக் கொண்டான்
அவர்கள் அடககப்பட்ட இடம் எங்கள் தந்தை S.E.அப்துல் காதர் சாஹிப் அவர்கள் அருகில் இன்றும் உள்ளது
அவர்கள் எங்கள் தந்தைக்கு எதிரிலேயே பலமுறை என்னை கண்டிக்க எங்கள் தந்தை அதனைக் கேட்டு மகிழ்வார்கள்
அவர்களுக்கு பலமுறை பெருநாள் அன்று எங்கள் தந்தை கொடுத்தனுப்பிய கைலியை கொண்டு கொடுத்துள்ளேன்
கொடுப்பதை வாங்க மறுப்பதில்லை ஆனால் அவர்களுக்கு தேவை இல்லாத அதிகப் படியான பொருட்களை மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்கள்
அவர்கள் இறந்தபோது பல ஊர் மக்கள் தங்கள் ஊருக்கு அவர் உடலை விரும்பி எடுத்துச் செல்ல விரும்பினார்கள் .நல்ல வேளை அது நடக்கவில்லை .மற்ற ஊருக்கு போய் இருந்தால் அவர்கள் கூடு போன்ற அனாச்சாரங்கள் நிகழ வாய்ப்பு இருந்திருக்கும் .அது நீடூர்-நெய்வாசலில் கிடையாது
அவரது ஜனாசா தொழுகைக்கு கண்ட மக்கள் தொகை இதுவரை நீடூர்-நெய்வாசலில் கண்டதில்லை இனியும் இருக்காது
அவரது நினைவாக நீடூர்-நெய்வாசலில் ஒரு கட்டிடமும் ஸல்லல்லாஹ் பாவா நகர் ஒன்றும் உள்ளது

"சலவாத் பாவா" பற்றிஅறியாதவர்கள் தமிழ் நாட்டில் யாருமில்லை . அவர்களுக்கு அனைவரும் மரியாதை கொடுத்து வந்தார்கள்.
"சலவாத் பாவா"வினைக் கண்டால் சிறார்கள் மிகவும் மகிழ்வார்கள் . அவர்களுடன் ஒரு மிட்டாய் டின் இருந்துக் கொண்டே இருக்கும் .அந்த மிட்டாய்க்கு "சலவாத் பாவா" மிட்டாய் என்ற பெயர் வந்து விட்டது .அந்த மிட்டாய்களை சலவாத் சொல்லச் சொல்லி அனைவர்க்கும் கொடுத்து மகிழ்வார்கள். எக்காலமும் அவர்கள் நாயகம் பெயரில் சலவாத் சொல்லிக் கொண்டே இருப்பதுடன் மற்றவரையும் சலவாத் ஓதச் சொல்லி உற்சாகப்படுத்தி வந்தமையால்தான் "சலவாத் பாவா" என்ற பெயர் அவர்களுக்கு வந்தது.

இன்னும் எழுதலாம் கட்டுரை நீண்டு விடும்

No comments:

Post a Comment