செல்வத்தைவிட சிறந்த செல்வம் மன அமைதி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
இறைவனை நேசித்து அவனை நேசிப்பவருக்கு
இறைவனது அருள் பெற்றவருக்கு மன அமைதி கிடைக்கும்
செல்வம் தீங்கிழைக்காது, அதை சரியான முறையில் பயன்படுத்துவதால்
இறைவனை நேசித்து அவனைத் தொழுது வருவோர்
செல்வத்தை தவறான முறையில் செலவழிக்க மாட்டார்
இறைபக்தியுடையோர் தவறான வழியில் செல்ல மாட்டார்
நற்செயல்களை நாடுவார்கள்
ஏழை மக்களுக்கு, செல்வத்தை செலவழிப்பார்
இறை பயபக்தியுடையவர்களுக்கு ஆரோக்கியம் பெருகும்
குறைவான செல்வம் பெற்றிருந்தாலும் நிறைவாக மனம் மகிழ வாழ்வார்கள்
மன அமைதி அல்லாஹ்வின் மிகப்பெரிய தயவால் கிடைக்கும் அருட் கொடையாகும் .
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை
குறள் எண்:657
பொழிப்பு (மு வரதராசன்): பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது
No comments:
Post a Comment