Showing posts with label கருத்து. Show all posts
Showing posts with label கருத்து. Show all posts

Wednesday, 16 April 2014

நான் உன்னை நேசிக்கின்றேன்

என் கருத்துக்கு மாறுபடுகிறாய்
உன் கருத்துக்கு நான் மாறுபடுகின்றேன்

உன் கொள்கை வேறு
என் கொள்கை வேறு

உன் கொள்கையில் உனக்கு பிடிப்பு
என் கொள்கையில் எனக்கு பிடிப்பு

உன் கொள்கையை என்னை ஏற்றுக் கொள்ள நீ வற்புறுத்தவில்லை
என் கொள்கையை உன்னை ஏற்றுக் கொள்ள நான் வற்புறுத்தவில்லை

Wednesday, 5 March 2014

இங்கே அங்குள்ள தொந்தரவு நீக்கம்

இங்கும் பேட்டி
அங்கும் பேட்டி

இங்கும் விளம்பரம்
அங்கும் விளம்பரம்

பெயரில் மாற்றம்
கொள்கையில் மாற்றம்

கொடுப்பதில் இணைந்தவை
பெறுவதிலும் இணைந்தவை

தமிழில் தொலைக்காட்சி
களித்திட தொலைக்காட்சி

அறிவைப் பெருக்க அயல் நாட்டு காட்சி
மாற்றிப் பார்க்க அவசியம் தொலை கட்டுப்பாடு கையில்

Monday, 20 January 2014

கருத்து வேறு! தகவல் வேறு!

கருத்துகள்

கருத்து வேறு!
தகவல் வேறு!

கருத்துகள் கொடுக்கிறோம்
தகவல் தருகிறோம்!
செய்திகளை சொல்கிறோம்

தகவலும் செய்தியும் உண்மையின்
அடிப்படையில் அமைதல் வேண்டும்

பொய்யான செய்திகள்
பொய்யான தகவல்கள்
மெய்யாகவே கேடுதான் தரும்

Monday, 28 October 2013

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)

எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்

Friday, 23 August 2013

ஒளிந்து நின்ற உப்பு சப்பான காரண காரியங்கள் ஓடி மறைந்தன

நம் திருமண மேடையில் பார்த்தோர் நமக்காக நாம் படைக்கப் பட்டோமென்றனர் (made for each other)
நம் திருமணம் இறைவனால் நிச்சயிக்கப் பட்டதாம்

நீ ஒரு பக்கமிருக்க நான் ஒருபக்கமிருந்தோம்
நீயும் நானும் ஒன்றிணைய நாம் காரணமில்லை

நீயும் நானும் ஒன்றிணைந்து விட்டோம் திருமண உறவில்
நீயும் நானும் ஒன்றிணைந்து உறவு மேன்பட்டது

Saturday, 25 May 2013

ஊக்கமுடையோர் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்.

  நல்ல கருத்தை ,கவிதையை விரும்பி படிக்க நமக்குள் ஒரு பொறி தட்டுகிறது. அது நம்மை உருவாக்குகின்றது .நம்மையும் அதைவிட சிறப்பாக எழுதத் தூண்டுகின்றது. நமக்குள் ஒளிந்துக் கிடப்பதனை நாம் அறியோம் .நம்மை நாமே நாம் அறிந்து விட்டால் நாம் ஞானி

  மற்றவர் நல்ல கருத்துகளை சுயமாக சிந்தித்து சிறப்பாக நயம்பட தருகின்றார்களே நாம் மட்டும் அடுத்தவர் கருத்தை போடுகின்றோமே என்ற வருத்தம் வேண்டாம்.  சொல்லியவர் ,எழுதியவர் ,உரிமையாளர் பெயரையும் சேர்த்து விடுங்கள் .அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். காப்புரிமை இப்பொழுது வந்ததுதான்.சங்க இலக்கியங்களுக்கு காப்புரிமை இருந்திருந்தால் தமிழ் மறைந்திருக்கும்.