அங்கும் பேட்டி
இங்கும் விளம்பரம்
அங்கும் விளம்பரம்
பெயரில் மாற்றம்
கொள்கையில் மாற்றம்
கொடுப்பதில் இணைந்தவை
பெறுவதிலும் இணைந்தவை
தமிழில் தொலைக்காட்சி
களித்திட தொலைக்காட்சி
அறிவைப் பெருக்க அயல் நாட்டு காட்சி
மாற்றிப் பார்க்க அவசியம் தொலை கட்டுப்பாடு கையில்
இங்கே அங்குள்ள தொந்தரவு நீக்கம்
அவன் சொல்லி நாம் கேட்க வேண்டியதில்லை
நாமே எழுதலாம்
நாமும் சண்டைப் போடலாம்
சிறுமை கொண்டு செயல் அற்ற நிலை நீக்கம்
பெருமை கொண்டு தேவையான படங்கள் போடலாம்
போடும் நம் படங்களாகவும் இருக்கலாம்
போடும் படங்கள் அடுத்தவர் படங்களாக இருந்தும்
நமது படங்களாக போட்டு பெருமையடையலாம்
அடுத்தவர் எழுத்தும்
மற்றவர் கருத்தும்
நம் கருத்தாக தந்து மகிழலாம்
அவர் காணப் போவதுமில்லை
அவர் கண்டாலும் வெறுக்கத்தான் செய்யலாம்
அவரால் அழிப்பதற்கு மனம் வராது அவரால் உருவானதை
No comments:
Post a Comment