Monday 20 January 2014

கருத்து வேறு! தகவல் வேறு!

கருத்துகள்

கருத்து வேறு!
தகவல் வேறு!

கருத்துகள் கொடுக்கிறோம்
தகவல் தருகிறோம்!
செய்திகளை சொல்கிறோம்

தகவலும் செய்தியும் உண்மையின்
அடிப்படையில் அமைதல் வேண்டும்

பொய்யான செய்திகள்
பொய்யான தகவல்கள்
மெய்யாகவே கேடுதான் தரும்


கருத்துகள் சொல்வதில் மேன்மை வேண்டும்
கருத்துகள் பகிர்வதில் பண்பாடு வேண்டும்
கருத்துகள் சொல்வதர்க்கும் தகுதி வேண்டும்
கருத்துகள் நெஞ்சை வருடி விட வேண்டும்
கருத்துகள் தன் மேதாவித்தனத்தை பறை சாற்றுவதற்காக அல்ல
கருத்துகள் விளக்கம் தருவதற்காக தரப்பட வேண்டும்
கருத்துகள் உயர்வான தத்துவத்தின் அடிப்படையில் அமைய வேண்டும்
கருத்துகள் தவறை மென்மையாக சுட்டிக் காட்டலாம்
கருத்துகள் உண்மையை உயர்த்தி நிற்கவும் அமையலாம்
கருத்துகள் மனதை புண் படுத்தும் விதமாக அமைதல் கூடாது
கருத்துகள் தெளிவாகவும் நல்ல நோக்கத்தோடு அமைதல் வேண்டும்
கருத்துகளிள் நோக்கம் உற்சாகப் படுத்துவதாகவும் இருக்கலாம்
கருத்துகள் தந்ததால் யாராவது பயன்பெரும்போது..
கருத்துகள் கொடுத்தவரும்
கருத்துகள் பெற்றவரும் நன்மை அடைகின்றனர்

1 comment:

  1. ஒவ்வொரு வரியும் அருமை... உண்மை... வித்தியாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete