Sunday, 18 February 2018

துளசேந்திரபுரம் உருவாகுதல். துளசேந்திரபுரம் பள்ளிவாசல்

ஆடியா பேச்சு A.H.பைஜூர் ஹாதி
கொள்ளிடத்தைச் சார்ந்த துளசேந்திரபுரம் சிறிய ஊர். அங்குள்ள முஸ்லிம்களுக்குக் குடியிருப்பு வசதிகளோ,
இறைவணக்கதிற்கு பள்ளிவாசலோ, சிறுவர் சிறுமியர்க்கு அறிவுக்கண் திறக்கச் செய்யும் ஓர் அரபி மதரஸாவோ இல்லாமலிருந்தன. அந்த ஊர் மக்கள் தங்களுக்கிருந்த அப்பெருங் குறைகளை
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களிடம் வந்து முறையிட்டனர்.
இவ்வளவு குறைகளையறிந்தும் ஹாஜியார் வாளாவிருப்பார்களா?

எவர்கள் விசுவாசம் கொண்டு கருமங்களை செய்கிறார்களோ, அவர்களை இறைவன் தன்னுடைய அருகில் புகுத்துவான். இதுவே தெளிவான வெற்றியாகும் ஜாஸியா(45:49)என்பது குர்ஆனின் மணிமொழி.


நற்செயல்களே தம் நாடித்துடிப்பாக கொண்ட ஹாஜியார் அவர்கள் இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஊர் இருக்குமோ! என்று கசிந்துருகி, மின்னல் வேகத்தில் செயல்பட்டார்கள். முதலில் ஓர் இடத்தை சொந்தத்தில் வாங்கி

எழில்மிகு பள்ளிவாசல் ஒன்றையும் மதரஸா ஒன்றையும் சிறந்த முறையில் கட்டிக்கொடுத்து. மக்களின் மனங்களிக்கச் செய்தார்கள். அவ்வூருக்கு அருகில் ஆணைதாண்டவபுரம் எம். கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமாகவிருந்த 3 வேலி நிலத்தைத் தாமே பணம் போட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாகவும்,தெருக்களாகவும் பிரித்தார்கள். வீடில்லா அவ்வூர் மக்களுக்கு மனைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அவ்வூர் மக்களின் துயரத்தை துடைத்தார்கள்.
அல்லாஹ்வுக்கு உதவியென்பது அல்லாஹ்வின் நல்லடியாருக்கு உதவியென்றாகின்றது. இம்மாதிரி கைமாறு கருதாத உதவியினால் ஆண்டவன் தன் கூற்றிகேற்ப ஹாஜியார் அவர்களயும் வளர்த்து வந்தான்.
-எலந்தங்குடி K.M. ஜக்கரியா, B.Com.,

------------------------------------------------
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.
குறள் விளக்கம்:
இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவர் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்
[கேட்கும் பொழுது கண்கள் கலங்குகிறது.
் அந்த இஹ்லாஸான எண்ணமே இன்றளவும் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை நினைவுகூற வைக்கிறது அந்த மக்களை.
-A.H.பைஜூர் ஹாதி

ஆடியா பேச்சு A.H.பைஜூர் ஹாதி

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments:

Post a Comment