யாரும் என்னை விட்டு விலகுவதில்லை
யாரும் என் அடையாளத்தை பிடுங்கவுமில்லை
அது என்னுடையது.
அது இந்தியாவின் தமிழ்நாடு நான்.
என் மலை மூலம்
என் நிலம் .மூலம்
என் மீது பாயும் ஆறுகள்
மிகச்சிறந்த, அற்புதமான
உயர்ந்த அருட்கொடைகள்
அதிகாலை இறைவனை வாழ்த்துவேன்
அருட்கொடையான அந்த பாயும் ஆறுகள்
என் வளமான பள்ளத்தாக்குகள் மீது ஜொலித்து
பாய்ந்து பள்ளங்களை நிரப்பி பாலைவனத்தை
சோலைவனமாக்கி வாழவின தொடற்சியைத் .தருவதால்
அது என் ரத்த ஓட்டம்.
அது என் மீதே ஓடுவதால்
அதனை தடுப்பதற்கு
யாருக்கும் உரிமையில்லை
நான் அதன் பெருமைக்குரிய உரிமையாளர்
அதன் கவசம் தான் உயிரானது
யார் எதிராக இருக்க முடியும்
நான் பயப்படவில்லை,
சத்தியம் என்னுடன் இருக்கிறது,
இறைவன் என்னுடன் இருக்கிறான்.
யாரும் என் அடையாளத்தை எடுக்க முடியாது
என் நாடு என்னை வாழவைக்கின்றது
எங்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்துவிட்டன .
என் தாளாத ஓட்டத்தை தடை செய்யாமல் இருக்க
உன் உதிரத்திலிருந்து தொடங்கினாலும்
அது எனக்காகத்தான் தொடங்கப்பட்டது
நான் சுதந்திரத்தின் கூக்குரல்
அவர்கள் என்னிடமிருந்து எதை எடுத்துக்கொண்டாலும்,
அவர்கள் என் அடையாளத்தை அகற்ற முடியாது
என் கண்ணியம். அதுவே காவிரியாகிய நான்.
No comments:
Post a Comment