உனக்கு என் இதயத்தில் வலுவான ஒரு இடம் கிடைத்தது,
உன்னால் உணர்வுகளை தெளிவானதாக மற்றும் வலுவானதாக ஆக்க முடியும்
உன் தொடர்பு உறுதியானதாக உள்ளது;
உன்னைப் பற்றி நான் யோசிப்பதை நிறுத்திவிட முடியாது,
நீ என வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக இருக்கிறாய்,
நீ தேன் ஆறுகள் பாய்ச்சும் உணர்வுகளை ஏற்படுத்துகின்றாய் ,
நீ என் இதயதில் ஒரு அழகான வாசனையை உருக வைக்கிறாய்.
உன் பந்தம் மற்றும் உன் மீதுள்ள காதல் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள காதலை விட மிகவும் வலுவாக உள்ளது ;
ஒவ்வொரு முறையும் உன்னை தொடும்போது மரியாதை மற்றும் மதிப்பும் உண்டாகின்றது
உன் பெருமையைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிகின்றது
நான் உனக்காக இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
நான் உன்னிடமிருந்தே பிரார்த்தனையை மற்றும் வாழ்வின் முறையை கற்றுக் கொண்டேன்
நான் ஏன் உன்னை மிகவும் காதலித்தேன்?
என் வாழ்நாள் முழுவதும் நான் உன் சொற்படி வாழத்தான்
கவலை, வலி மற்றும் அத்துனை துன்பங்களையும் போக்க வல்ல மாமருந்தாய் இருக்கின்றாய்
உன்னை புறக்கணிக்க முடியாது , உன்னிடமிருந்து ஒரு புதிய உணர்வு என் இதயத்தில் நுழைந்து நிறைகின்றாய்
அற்புதமான உன்னை கொடுத்த , கருணை நிறைந்த இறைவனுக்கே புகழனைத்தும்
உன் சொற்களை கேட்க என் காதுகளுக்கு ஊக்கமளித்திருக்கிறது,
நீ சத்தியத்தின் சப்தம் தருகின்றாய்
உனக்கு இறைவனே அழகிய பெயர் சூட்டி விட்டான் 'குர்ஆன்' என்று
----------------
குர்ஆனை அறிந்து கொள்ளுங்கள், அன்பை அறிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment