வேலைக்கு தேர்ந்தெடுக்க தேர்வு வை தகுதியானவரை தேர்ந்தெடு ஆனால்
தேர்வு /பரீட்சை /என்று படிக்கும்போதே வடிகட்டினால்
கேரளாவில் அந்த காலத்திலேயே படித்தவர்கள் அதிக விழுக்காடு வந்திருக்கமாட்டார்கள் (தேர்வு வைத்தாலும் அதே வகுப்பில் தங்க வைப்பதில்லை மேல் வகுப்புக்கு கடத்தி விடுவார்கள் /அப்படி நான் கேள்விப்பட்டது )
படித்து பட்டம்பெற்ற பின் அவர்களாகவே தன்னை தயார்படுத்திக் கொள்வார்கள்
படிக்காத குடும்பத்தில் வந்த மாணவர்கள்
வசதியற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்
ஒழுக்கமே உயர்ந்த படிப்பு .கல்வியில் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
தன்னம்பிகையை வளர்க்க வேண்டும்
நான் குர்ஆன் ஓத கற்க சென்றபோது அதனை சொல்லித் தருபவர் பாடம் வரவில்லையென்று திருப்பித் திருப்பி ஆரம்பத்திலிருந்து ஓத வைத்தார் அதனால் சில பக்கங்கள் மனனம் ஆனது ஆனால் கற்றுக்கொள்ள முடியவில்லை .வேறு ஒரு ஆசிரியர் (ஹஜ்ரத் ) அப்படிச் செய்யாமல் தொடர்ந்து ஓதக் கற்றுக் கொடுத்தார் .அதனால் கற்க முடிந்தது .அதில் ஆர்வமும் வந்தது
No comments:
Post a Comment